“ரோகித் பையா வேற லெவல்.. எனக்கு அவர் சொல்ற அட்வைஸ் இதுதான்” – ஜெய்ஸ்வால் பேட்டி

0
149
Jaiswal

2021 ஆம் ஆண்டு இறுதியில் விராட் கோலி இடம் இருந்த கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவசம் வந்தது. அந்த வருடத்தில் தென் ஆப்பிரிக்க தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்க முடியாத சூழ்நிலை நிலவியது.

இதற்கு அடுத்து நியூசிலாந்துக்கு எதிராக 2022 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அவர் கேப்டனாக பொறுப்பேற்று டி20 தொடரை சந்தித்தார். அங்கிருந்து இந்திய அணிக்கான அவருடைய கேப்டன் பொறுப்பின் பயணம் ஆரம்பித்தது.

- Advertisement -

விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேறி சென்ற சமயத்தில் அணி சிதறி கிடந்தது. இந்திய அணியை சுற்றி நிறைய குழப்பங்கள் நிலவின. இன்னொரு பக்கம் விராட் கோலியின் பேட்டிங் ஃபார்மும் சரிந்திருந்தது.

இந்த நிலையில் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் இணைந்து புதிய அணியை மட்டும் அல்லாமல் புதிய அணி கலாச்சாரத்தையும், தைரியமான ஆட்ட அணுகு முறையையும் உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்கள். அது ஆரம்ப கட்டம் என்பதால் சில அடிகள் விழ செய்தது.

அவர்கள் உருவாக்கிய அணுகு முறையில் முழு பலனும் நடந்து முடிந்த ஒரு நாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் கிடைத்தது. இந்திய அணி மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அதிர்ச்சிகரமான முறையில் இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

ஆனால் தற்போது இந்தியாவுக்கு மூன்று வடிவங்களிலும் நிலையான அணி இருக்கிறது. நல்ல அணுகு முறையையும் நல்ல அணி கலாச்சாரமும் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட்.

இவர்களுடைய தலைமை பொறுப்பின் காலத்தில் அணிக்குள் கொண்டுவரப்பட்ட ஜெய்ஸ்வால் தற்பொழுது டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு துவக்க வீரராக களம் கண்டு வருகிறார்.

நேற்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மிகச்சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் ரோஹித் சர்மா பற்றி பேசும்பொழுது ” ரோகித் சர்மா எப்பொழுதும் என்னுடைய இயல்பான ஆட்டத்தை போய் விளையாடச் சொல்கிறார். அவர் எனது ஷாட்கள் எதுவோ அதை ஆடச் சொல்கிறார். எப்போதும் அங்கே அவர் ஆதரவாக இருப்பார். கூடவே இருந்து கவனித்துக் கொள்வார். அவரைப் போன்ற ஒரு சீனியர் இப்படி இருப்பது நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.