முதல் இரண்டு டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி நியாயமற்றது, பிட்ச்சை வைத்து ஏமாற்றினார்கள்; 4வது டெஸ்டிலும் அதை செய்வார்கள் – ஆஸி., ஜாம்பவான் பேட்டி!

0
270

இந்திய அணியினர் அவர்களுக்கு சாதகமான பிட்ச் தயார் செய்கிறார்கள், கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதில்லை. நான்காவது டெஸ்டிலும் அதை செய்வார்கள் என விமர்சித்திருக்கிறார் இயான் சேப்பல்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் துவங்கியதில் இருந்து, மைதானத்தின் பிட்ச் குறித்த விமர்சனங்களும் துவங்கிவிட்டன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.

- Advertisement -

“இந்திய அணி பெற்ற இத்தகைய வெற்றி அவர்களுக்கானது அல்ல, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றவாறு பிட்ச் தயார் செய்து நியாயமற்ற முறையில் வெற்றியை பெற்று விட்டார்கள்” என்று ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் இயான் சேப்பல் கடுமையான கருத்தை முன் வைத்திருக்கிறார்.

“மூன்றாவது டெஸ்டிலும் இந்திய அணியினர் அந்த தவறை செய்தார்கள். ஆனால் அது அவர்களுக்கே ஆப்பு வைத்தது போல மாறிவிட்டது. நான்காவது டெஸ்ட் போட்டியில் நிறுத்த மாட்டார்கள். மீண்டும் அதை செய்வார்கள்.” என்றும் தனது விமர்சனத்த்தில் கூறியுள்ளார்.

மேலும் அவர் தனது பேட்டியில் கூறியதாவது:

- Advertisement -

“எங்கேயாவது அணியின் வீரர்கள், கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மைதானத்தின் பிட்ச் விஷயத்தில் தலையிட்டு நாம் பார்த்தது உண்டா?, ஆஸ்திரேலியாவிற்கு வந்து இந்திய அணியினர் இரண்டு முறை டெஸ்ட் தொடர்களை கைப்பற்றினார்கள். அப்போது ஆஸ்திரேலியா அணியினர் எவராவது பிட்ச் பராமரிப்பாளரிடம் பேசியதை பார்த்திருக்கிறார்களா?.”

“இந்திய அணியினர் தங்களது கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அவர்கள் பிட்ச் விஷயத்தில் அதிகமாக கவனம் செலுத்துகிறார்கள். ரோகித் சர்மா மற்றும் குழுவினருக்கு ஒன்றை மற்றும் கூறிக்கொள்கிறேன். கிரிக்கெட்டை வெளிப்படுத்தி உங்களது வெற்றியை பெற வேண்டும். அதுதான் விளையாட்டுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை.” என்று பேசினார்.

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி வருகிற மார்ச் 9ஆம் தேதி குஜராத்தில் உள்ள அகமதாபாத் மைதானத்தில் துவங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.