“பாகிஸ்தானை சாய்க்க ரோகித்தான் காரணம்.. என்கிட்ட அவர் இதை சொன்னார்!” – குல்திப் யாதவ் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
3295
Kuldeep

நடப்பு உலகக் கோப்பை தொடரில் மிகப்பெரிய போட்டியாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது.

இந்த வெற்றியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் முக்கிய பங்கை வகித்திருந்தார்கள். வந்து வீசியதில் சர்துல் தாக்கூர் தவிர மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றி அசத்தியிருந்தார்கள்.

- Advertisement -

இந்த போட்டியில் முதல் விக்கெட்டை முகமது சிராஜ் கைப்பற்றி இருந்தார். மேற்கொண்டு இரண்டு விக்கெட் விழுந்த பிறகு, பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் சேர்ந்து அணியை மிகச்சிறப்பாக மீட்டுக் கொண்டு வந்தார்கள்.

இந்த நிலையில் மீண்டும் முகமது சிராஜ் பாபர் அசாம் விக்கட்டை கைப்பற்றி இந்திய அணிக்கு சிறந்த திருப்புமுனையை கொண்டு வந்தார். இங்கிருந்து குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட் கைப்பற்றினார். மேலும் அதே இடத்தில் பும்ரா இரண்டு விக்கெட்டை கைப்பற்ற ஆட்டம் மொத்தமாக இந்தியா பக்கம் வந்துவிட்டது.

இதுகுறித்து பேசி உள்ள குல்தீப் யாதவ் கூறும் பொழுது “அந்த போட்டியில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் எங்களை தாக்கி விளையாடவில்லை. அதனால் நான் என்னுடைய வேகமாறுபாடு மற்றும் வேரியேஷன்களில் மட்டும் கவனம் செலுத்தினேன். நான் என்னுடைய ஏழு ஓவர்களில் விக்கெட் கைப்பற்றவில்லை.

- Advertisement -

ஆனால் நான் சரியான இடங்களில் பந்தை வீசி தாக்கி கொண்டு இருந்தேன். பந்து நன்றாக வெளியேறி சென்று கொண்டிருந்தது. அவ்வாறான ஆடுகளங்களில் பெரிதான பார்ட்னர்ஷிப் இல்லாத நேரத்தில் அவ்வாறு வீசுவது முக்கியமானது.

அந்த நேரத்தில் என்னிடம் ரோகித் பாய் ஒரு கூடுதல் ஓவர் வீச சொல்லி கேட்டுக்கொண்டார். மேலும் சிராஜ் அந்த இடத்தில் பாபர் விக்கெட்டை கைப்பற்றி ஒரு திருப்புமுனையை உருவாக்கி இருந்தார். நான் அந்த கூடுதல் ஓவரில் இரண்டு விக்கெட் கைப்பற்ற, அவர்களால் மேற்கொண்டு இன்னிங்சை உருவாக்குவது மிக கடினமாக மாறிவிட்டது!” என்று கூறி இருக்கிறார்!