இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
ஆனால் கடந்த காலங்களில் விராட் கோலி ரன்கள் எடுப்பதற்கே மிகவும் சிரமப்பட்டது இந்த விஷயத்தினால்தான் என்று ராபின் உத்தப்பா கூறி இருக்கிறார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 120 பந்துகளை எதிர் கொண்டு 11 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர் என 135 ரன்கள் குவித்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இது இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. விராட் கோலி எப்போதெல்லாம் சதம் அடிக்கிறாரோ அப்போதெல்லாம் இந்திய அணியின் வெற்றி 100% உறுதி என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
ஆனால் கடந்த காலங்களில் விராட் கோலி ரன்கள் எடுப்பதற்கே மிகவும் சிரமப்பட்டு தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். இதனால் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விரைவாக ஓய்வு பெற்றார் என்று சில தரப்புகள் கூறுகின்றன. ஆனால் விராட் கோலி இப்போது விளையாடிய இப்போது விளையாடிய விதத்தைப் பார்க்கும்போது மிகவும் புத்துணர்ச்சியாக காணப்படுகிறார் என்றும் கடந்த காலங்களில் ஏற்பட்ட சோர்வு அவரிடம் இல்லை என்று ராபின் உத்தப்பா பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “அவர் இந்த போட்டிக்கு தயாராக இருந்தார் என்று நான் கூறுவது, கடந்த காலங்களில் அவர் தயாராக இல்லை என்பது போல் கிடையாது. கடந்த காலங்களில் அவர் முயற்சி செய்து முயற்சி செய்து சோர்வாகினார் என்பது அவரது கண்களிலும் அவரிடமும் தெரிந்தது என்று நினைக்கிறேன். அது அவரது சோர்வு. அதுதான் அவரை கிட்டத்தட்ட அதே இடத்தில் உட்கார வைத்தது என்பது போல தோன்றியது.
இதையும் படிங்க:அகர்கர் செலக்சன் ரொம்ப தப்பானது.. இந்த வீரரை தேர்வு செஞ்சதிலேயே தெரிஞ்சு போச்சு – அஸ்வின் பேச்சு
ஏனென்றால் அந்த காலகட்டத்தில் அவர் ரன்கள் எடுக்க மிகவும் போராடிய போது முயற்சி செய்து முயற்சி செய்து சோர்வடைந்தது என்பது வெளிப்படையாக தெரிந்தது. ஆனால் இப்போது முதல் ஒருநாள் போட்டியில் அவர் பேட்டிங் செய்த விதத்தை பார்த்தபோது அவரது கண்களில் அதிக நம்பிக்கை தெரிந்தது. அவர் ஆட்டத்தை எதிர்கொண்ட விதம் மிகவும் அமைதியாக துல்லியமாக விளையாடினார். ஒவ்வொரு பந்தையும் விளையாட அவர் எடுத்துக் கொண்ட நேரம் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதுதான் அவரது ஆட்டத்தின் தனிப்பகுதி” என்று பேசி இருக்கிறார்.






