அகர்கர் செலக்சன் ரொம்ப தப்பானது.. இந்த வீரரை தேர்வு செஞ்சதிலேயே தெரிஞ்சு போச்சு – அஸ்வின் பேச்சு

0
112
Ashwin

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் தேர்வு தவறாக இருப்பதாக ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் அணி வரிசையில் எட்டாவது இடத்தில் ஹர்ஷித் ராணா இடம் பெற்று விளையாடினார்.

- Advertisement -

தேர்வில் குழப்பம்

இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை. அவருடைய இடத்திற்கு நிதீஷ் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். எதிர்காலத்தில் உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்தால் அவருடைய இடத்தை நிரப்புவதற்கு வீரரை கண்டறிய வேண்டிய கட்டாயம் இருந்தது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அந்த இடம் நேரடியாக ஹர்ஷித் ராணாவுக்கு கொடுக்கப்பட்டது. மேலும் தொடக்க வீரரான ருதுராஜ் நான்காவது இடத்தில் விளையாட வைக்கப்பட்டார். ஆனால் மிடில் ஆர்டரில் விளையாடும் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

அணித்தேர்வு தவறானது

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில் நிதிஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்றால், அணிதேர்விலேயே ஏதோ தவறு இருப்பதாக அர்த்தம். முதலில் நிதீஷ் குமார் ரெட்டி ஏன் தேர்வு செய்யப்பட்டார்? ஹர்திக் பாண்டியா கொடுப்பதை அவராலும் கொடுக்க முடியும் என்பதாலும், காலப்போக்கில் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதாலும்தான். அப்படி இருக்கும் பொழுது இந்த போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்றால், அணி தேர்வை நாம் மறு ஆய்வு செய்ய வேண்டும்”

இதையும் படிங்க: ருதுராஜுக்காக கை கூப்பி கேட்டுகிட்டேன்.. அவரை வெளியே அனுப்ப கம்பீருக்கு உரிமை இல்லை – ஆகாஷ் சோப்ரா வேண்டுகோள்

“நீங்கள் ருதுராஜுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தீர்கள், அவரால் ரன் எடுக்க முடியவில்லை. இதற்காக நீங்கள் உடனே திலக் வர்மாவிடம் செல்லக்கூடாது. இவருக்கு நீங்கள் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும். பிறகு தான் நீங்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -