நான் சொல்றேன் நம்புங்க.. விராட் கோலி இந்த விஷயத்தை செய்தால்.. 2025ம் ஆண்டு அவருக்குத்தான் – ராபின் உத்தப்பா நம்பிக்கை

0
272

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் விராட் கோலி இரண்டாவது இன்னிங்ஸிலும் ஒரே மாதிரியாக ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இந்த சூழ்நிலையில் அவர் மீது ஏராளமான விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா நம்பிக்கையாக சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி மீண்டும் ஏமாற்றம்

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக திகழ்ந்த விராட் கோலி சில ஆண்டுகளாகவே பேட்டிங்கில் மிகவும் தடுமாறி வருகிறார். குறிப்பாக அவுட்சைட் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளில் விராட் கோலி தொடர்ச்சியாக ஆட்டம் இழந்து வெளியேறி வருகிறார். தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் எட்டு முறை விராட் கோலி குறைந்த ரன்னில் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளில் ஆட்டம் இழந்து வெளியேறி இருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் விராட் கோலி மீது பல்வேறு எதிர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடைசி டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி வெறும் ஆறு ரன்னில் போலன்ட் பந்துவீச்சில் வெளியேறி இருக்கும் நிலையில் இந்திய அணி தற்போது சிக்கலில் மாட்டியிருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா விராட் கோலி தனது தொழில்நுட்பத்தில் சில மாற்றங்களை செய்தால் இந்த ஆண்டு அவருக்கு மிகப்பெரிய ஆண்டாக இருக்கும் என்று சில நம்பிக்கையான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நம்பிக்கை அளித்த இந்திய முன்னாள் வீரர்

இதுகுறித்து ராபின் உத்தப்பா கூறும் பொழுது “இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் விராட் கோலிக்கு மிச்சமில்லாமல் போய்விட்டது என்று நான் நினைக்கிறேன். இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு விராட் கோலி பெரிய அளவில் ரன்கள் குவிப்பார் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. விராட் கோலி தனது பேட்டிங் நுட்பத்தில் சிறிய மாறுதல்களை செய்ய வேண்டும். அதை மட்டும் விராட் கோலி சரியாக கணித்து விளையாடிவிட்டால் அதற்குப் பிறகு அவரை யாரும் நிறுத்த முடியாது.

இதையும் படிங்க:எங்க வீரரை மிரட்டி இருக்காங்க.. ஐசிசி தண்டிக்கல.. இனி எங்க வழியே வேற – ஆஸி கோச் ஆன்ட்ரூ மெக்டொனால்ட் பேச்சு

மிகப்பெரிய அளவில் ரன்கள் குவிக்க ஆரம்பிப்பார். பழைய விராட் கோலியை பார்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. நான் உங்களுக்கு நிச்சயமாக சொல்கிறேன், 2025 ஆம் ஆண்டு விராட் கோலி பெரிய அளவில் ரன்கள் குவிக்க போகிறார்” என்று உத்தப்பா கூறியிருக்கிறார். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய அணி பிப்ரவரி மாதத்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் விளையாட உள்ள நிலையில் விராட் கோலி திரும்பவும் பேட்டிங் ஃபார்ம்முக்கு வருவார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.

- Advertisement -