இந்திய கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாராக சுப்மன் கில்லை உருவாக்குவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்வதாகவும், இது இந்திய கிரிக்கெட்டில் வழக்கமான கதைதான் எனவும் ராபின் உத்தப்பா கூறியிருக்கிறார்.
தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆசியக் கோப்பை இந்திய டி20 அணியில் சுப்மன் கில்லை சேர்த்ததோடு அவருக்கு துணை கேப்டன் பொறுப்பும் கொடுத்து இருக்கிறார்கள். இதன் காரணமாக சஞ்சு சாம்சன் தனது இடத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசும் பொழுது “தற்போது இந்திய டி20 கிரிக்கெட் திட்டங்களில் கில்லை கொண்டு வந்ததின் மூலமாக அவர்கள் தங்களுக்கு ஒரு பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் எப்பொழுது பார்த்தாலும் ஒரு சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் இருந்திருக்கிறார்”
“இதன் வழியிலேயே தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட்டுக்காக ஒரு குறிப்பிட்ட வீரரை தொடர்ந்து ஆதரித்திருக்கிறது. தற்பொழுது கில் விஷயத்திலும் அதே கதை தான் பின்பற்றப்படுகிறது என்று நான் நினைக்கிறேன்”
“கில் விஷயத்தில் மார்க்கெட்டிங் மற்றும் பிசினஸ் இரண்டுமே முன்னுரிமை பெறுகிறது என்று நான் நினைக்கிறேன். இதுவும் அவரை முன்னே கொண்டு வருவதற்கான ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. சில வீரர்கள் கிரிக்கெட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். கில் உங்களுக்கு அப்படிப்பட்ட வீரராக இருக்கலாம்”
இதையும் படிங்க : ரோகித் டிராவிட் ஜோடி கம்பீருக்கு வைத்த பெரிய செக்.. ஆசிய கோப்பையில் ஏற்பட்ட நெருக்கடி – விரிவான அலசல்
“தற்போது கேரளா டி20 லீக்கில் சஞ்சு சாம்சன் பினிஷர் ஆக ஐந்தாவது இடத்தில் விளையாடினார். ஆனால் அதில் அவரால் வெற்றிகரமாக செயல்பட முடியவில்லை. இதை அவர் செய்திருக்க வேண்டும் என்றால் 5 வருடங்களுக்கு முன்பே செய்திருக்க வேண்டும். தற்பொழுது 30 வயதிற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இந்த இடத்தில் வந்து விளையாடி அதை சரியாக செய்ய முடியாது” என்று கூறியிருக்கிறார்.