இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஜோடியின் சிறப்பான செயல்பாடு தற்போது இந்திய பயிற்சியாளர் கம்பீருக்கு பெரிய நெருக்கடியை உருவாக்கி இருக்கிறது.
இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடர் டி20 வடிவத்தில் யுனைடெட் அரபு எமிரேட்டில் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் துவங்குகிறது. இதில் இந்திய அணியின் பிரிவில் பாகிஸ்தான், யுஏஇ மற்றும் ஓமன் நாடுகள் இடம் பெற்று இருக்கின்றன.
ரோகித் டிராவிட் செய்த சம்பவம்
ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஜோடி முதன் முதலில் ஆசியக் கோப்பை தொடரில் தோல்வி அடைந்து பெரிய விமர்சனத்தை சந்தித்தது. இதைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை தொடரை வென்றது.
இதற்கு அடுத்து 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரையும் இந்த ஜோடி வென்றது. இதன் காரணமாக தற்பொழுது இந்திய அணி உலக சாம்பியன் மற்றும் ஆசிய சாம்பியன் என இரண்டு பட்டங்களையும் கைவசம் வைத்திருக்கிறது.
கம்பீருக்கு நெருக்கடி
இந்த நிலையில் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்று செயல்பட்டு வரும் கம்பீர் இந்திய அணியின் மொத்த கட்டுப்பாட்டையும் கையில் வைத்திருக்கிறார். எனவே கேப்டன் தாண்டி வெற்றி தோல்வி கம்பீருக்கு போய் சேரும் வகையில் இருக்கிறது.
இதையும் படிங்க : என் சிஷ்யன் ஜிதேஷ் சர்மா இந்தியாவுக்கு விளையாட விரும்பல.. நிலைமை இதுதான் – தினேஷ் கார்த்திக் பேட்டி
இதன் காரணமாக தற்போது உலக சாம்பியன் ஆகவும் ஆசிய சாம்பியனாகவும் இருந்து வரும் இந்திய அணி டி20 வடிவத்தில் நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்திய அணி ஒருவேளை வெல்லவில்லை என்றால் கம்பீர் மிகப்பெரிய விமர்சனங்களை சந்திக்க வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.






