இந்திய கிரிக்கெட்

ஐபிஎல்தான் டாடி.. 1000 சிக்ஸர்கள்.. டபுள் ஹாட்ரிக்.. 300 ரன் – உத்தப்பா தைரிய கணிப்பு

உலகெங்கும் நடைபெறும் டி20 லீக்குகளின் தந்தையாக ஐபிஎல் இருக்கிறது எனவும், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பல ஆச்சரியப்படுத்த சம்பவங்கள் நடக்கப் போகிறது என்றும் இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கணிப்பு தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 273 ரன்கள் தாண்டி எடுக்கப்பட்டது, மேலும் 250 ரன்கள் தாண்டி சேஸ் செய்யப்பட்டது. எனவே இந்த ஆண்டு இன்னும் இவற்றின் வேகம் அதிகமாக இருக்கும் எனவும், மறக்க முடியாத பல முதல் சாதனைகள் நடைபெறும் எனவும் ராபின் உத்தப்பா கூறியிருக்கிறார்.

மாற்றத்தை ஏற்படுத்திய 2024 ஐபிஎல்

பொதுவாக வேகமாக மாறிக் கொண்டிருக்கும் கிரிக்கெட்டில் பேட்டிங் அணுகுமுறை மிகவும் அதிரடியாக மாறுவது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் கொண்டு வந்த இம்பாக்ட் பிளேயர் விதியை அதிரடியாக எப்படி பயன்படுத்துவது என்பதை எல்லா அணிகளும் கடந்த ஆண்டு முழுமையாக புரிந்து கொண்டன.

இதன் அடிப்படையில் பொதுவாக அதிரடியாக மாறிய பேட்டிங், இம்பேக்ட் பிளேயர் விதியின் காரணமாக இன்னும் பயமற்றதாக மாறியது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் இருந்தது. டி20 கிரிக்கெட் இன்னொரு கட்டத்திற்கு தன்னை பரிணாமம் செய்து கொண்டது. ஐபிஎல் வரலாற்றில் கடந்த ஆண்டு மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது.

- Advertisement -

ஆயிரம் சிக்ஸர்கள் வரப்போகுது

இது குறித்து ராபின் உத்தப்பா பேசும் பொழுது “பரிணாமம் மிகவும் வேகமாக இருக்கிறது. ஒரு சிலர் இதை தொடர முடியாமல் தடுமாறுகிறார்கள். கிரிக்கெட் மீது ரசிகர்களுக்கு எப்பொழுதும் ஒரு காதல் இருந்தது. அந்த காதல் இப்பொழுது அட்ரீனல் சுரக்கும் அளவுக்கு உற்சாகமாக மாறி இருக்கிறது. ஐபிஎல் தொடர் உலக டி20 லீக்குகளின் தந்தையாக மாறிவிட்டது”

இதையும் படிங்க : இந்திய தரப்பு சொல்றது பொய்.. சாம்பியன்ஸ் டிராபியால் லாபம்.. ஆனா ஐசிசி இதை செய்யணும் – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

“ஐபிஎல் தொடரில் நாம் எல்லாவற்றையும் பார்த்து விட்டோம் என்று நினைக்கிறேன். ஆனால் இருந்த போதும் இன்னும் அதிகமாக கிடைக்க இருக்கிறது. இந்த ஆண்டு ஆயிரம் சிக்ஸர்கள் அடிக்கப்படலாம். ஒரு அணி முதல்முறையாக 300 ரன் எடுக்கலாம். மேலும் 275 ரன்கள் தாண்டி சேஸ் செய்யப்படலாம். இத்துடன் டபுள் ஹாட்ரிக் எடுக்கும் அதிசய நிகழ்வும் நடைபெறலாம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts