ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்தியதால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு எந்த வித நஷ்டமும் ஏற்படவில்லை என்றும், இது தொடர்பாக இந்திய பத்திரிகைகளில் வந்த செய்திகள் பொய்யானது என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்து இருக்கிறது.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு ஐசிசி தொடரை நடத்தும் வாய்ப்பை இந்த முறை சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்திய இதன் மூலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்றது. இந்தியா துபாயில் விளையாடியதும் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியாததும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வருவாயை பாதித்ததாக கூறப்பட்டது. ஆனால் இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்திருக்கிறது.
இந்திய பத்திரிகைகளில் வந்த செய்தி
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 869 கோடி செலவு செய்ததாகவும், அதில் 85 சதவீதம் நஷ்டத்தில் முடிந்து விட்டதாகவும் இந்திய பத்திரிகைகளில் செய்தியானது. மேலும் இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை குறைக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் நஷ்டம் ஏதும் ஏற்படவில்லை என்றும், அதே சமயத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை லாபமாக கிடைத்து இருக்கிறது என்றும், இருந்த போதிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஐசிசி தங்களுக்கு கொடுத்தால் நல்லது என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தரப்பில் பேசப்பட்டு இருக்கிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய கோரிக்கை
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய பொறுப்பில் இருக்கும் மிர் இது தொடர்பாக பேசி இருந்த பொழுது மூன்று மில்லியன் அளவுக்கு லாபம் கிடைத்திருக்கிறது என்றும், மேலும் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உலகின் முதல் மூன்று பணக்கார கிரிக்கெட் வாரியத்தில் ஒன்றாக மாறி இருக்கிறது என்றும், தொடரை நடத்தியதால் எந்த நஷ்டமும் இல்லை என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : ஐபிஎல் ல முக்கியமான விஷயம் திறமை கிடையாது.. இந்த 3 பசங்களுக்கு நான் ஃபேன் – சுரேஷ் ரெய்னா பேச்சு
மேலும் ஐசிசி தங்களுக்கு மூன்று மில்லியன் பணம் கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்டிருக்கிறது. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நக்வி பாகிஸ்தான் வீரர்களுக்கு சம்பளத்தை குறைக்கும் முடிவை மாற்றிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திய பத்திரிகைகளில் வந்த செய்தியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறுத்திருக்கிறது!