ராஜஸ்தான் அணியின் செல்வாக்கே அந்த ஒருவர்தான்.. அவரை கழட்டி விட்டது ஆச்சரியமா இருக்கு – ராபின் உத்தப்பா பேட்டி

0
386

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கடந்த ஆக்ஷனில் ராஜஸ்தான் அணி செயல்பட்ட விதம் குறித்து தனது விமர்சனத்தை கூறி இருக்கிறார்.

- Advertisement -

ராஜஸ்தான் அணி தோல்வி

நடப்பு ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் வெற்றி மற்றும் மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவி தற்போது புள்ளி பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய ராஜஸ்தான் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இனி வருகிற பெரும்பாலான போட்டிகளில் வெற்றி பெற வேண்டியது ராஜஸ்தான் அணிக்கு கட்டாயமான ஒன்றாக இருக்கிறது.

ராஜஸ்தான் அணி வீரர்கள் தக்க வைப்பின்போது சில தவறுகளை செய்தது. குறிப்பாக அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஜாஸ் பட்லரை தக்க வைக்க அணி நிர்வாகம் தவறியது. அது மட்டுமல்லாமல் அணியின் முன்னணி வீரர்களாக இருந்த அஸ்வின், சஹால் மற்றும் போல்ட் போன்ற வீரர்களை தக்க வைக்காமல் பெரிய தவறை செய்தது. இந்த சூழ்நிலையில் இது குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

எனக்கு ஆச்சர்யமாக உள்ளது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஏலத்தில் ராஜஸ்தான் அணி அங்கேயே தவறு செய்தது என்று நினைக்கிறேன். பட்லர், அஸ்வின், சஹால் போன்ற வீரர்களை விடுவித்த நிலையில் அங்கேயே பெரிய ஓட்டைகளை விட்டு விட்டார்கள் என்று நினைக்கிறேன். மேலும் தற்போது விளையாடி வரும் ஹெட்மையர் காயம் அடைந்தால் கூட அவர்களுக்கு சரியான மாற்று வீரர் கிடையாது. இது உண்மையில் அவர்களுக்கு எப்படி வேலை செய்கிறது என்ற கேள்வியை கேட்க வைக்கிறது.

இதையும் படிங்க:ஒரே மைதானத்தில் 5 முறை.. டிவில்லியர்ஸ் ரெக்கார்டை சமன் செய்த தமிழக வீரர்.. ஐபிஎல் வரலாற்றில் முதல் இந்தியராக சாதனை

இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் சஞ்சு சாம்சன் மற்றும் ஜாஸ் பட்லருக்கும் இடையேயான தொடர்பு அணி மற்றும் அதனைச் சுற்றி பெரிய செல்வாக்கை கொண்டிருந்தது. களத்தில் உங்கள் கிரிக்கெட் செயல் திறன் மட்டுமல்ல, மற்ற காரணிகளும் மதிப்பை சேர்க்கின்றன. அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தக்கவைக்காதது என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது” என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -