ஒரே மைதானத்தில் 5 முறை.. டிவில்லியர்ஸ் ரெக்கார்டை சமன் செய்த தமிழக வீரர்.. ஐபிஎல் வரலாற்றில் முதல் இந்தியராக சாதனை

0
105

நேற்று நடைபெற்று முடிந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 23வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதி விளையாடின.

இதில் குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாய் சுதர்சன் அபாரமான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

- Advertisement -

ராஜஸ்தான் குஜராத் மோதல்

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன் படி பேட்டிங் களம் இறங்கிய குஜராத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினார்கள். இதில் தொடக்க ஆட்டக்காரர் கில் 2 ரன்னில் வெளியேற சாய் சுதர்சன் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் 32 பந்துகளில் அரை சதம் அடித்தார். 53 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 8 பவுண்டரி மற்றும் 3 சிக்சர் என 82 ரன்கள் குவித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது அபார ஆட்டத்தின் மூலமாக குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் குவித்தது. இந்த போட்டியின் மூலமாக சாய் சுதர்சன் சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

- Advertisement -

சாய் சுதர்சன் சிறப்பான சாதனை

அதாவது ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் தொடர்ச்சியாக ஐந்து முறை 50க்கும் அதிகமான ரன்கள் குவித்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற சாதனையை தமிழக வீரர் சாய் சுதர்சன் படைத்திருக்கிறார். அவர் ஏற்கனவே நரேந்திர மோடி மைதானத்தில் முறையே 82*, 63, 74, 103, 84 ரன்கள் என சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதற்கு முன்னர் கடந்த 2018 மற்றும் 19 ஆம் ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தொடர்ந்து ஐந்து முறை பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் அரை சதங்கள் அடித்து இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது பேட்ஸ்மேன் ஆக சாய் சுதர்சன் மாறி இருக்கிறார்.

இதையும் படிங்க:டாசில் நான் எடுத்த முடிவு சரிதான்.. ஆனால் எங்கள் பேட்டிங்கில் இந்த தப்பை செஞ்சிருக்க கூடாது – சஞ்சு சாம்சன் பேட்டி

இந்தத் தொடரில் சாய் சுதர்சன் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மற்ற குஜராத் அணி வீரர்களான ஜாஸ் பட்லர் 36 ரன் ஷாருக்கான் 36 ரன் ராகுல் திவேட்டியா 12 பந்துகளில் 24 ரன் என என சிறப்பான ஆட்டத்தை விளையாடி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி குஜராத் அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 159 ரன்கள் மட்டுமே எடுத்து 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

- Advertisement -