இந்திய அணியில் ஆல் ரவுண்டர்கள் உருவாவதற்கு பயிற்சியாளராக கம்பீர் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ராபின் உத்தப்பா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
தற்போது இந்திய அணியில் ஆல்ரவுண்டர்களாக வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி என டெஸ்ட் அணியில் இரண்டு புதிய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் உண்மையிலேயே இன்னும் ஆல்ரவுண்டர்கள் ஆகவில்லை என ராபின் உத்தப்பா தெரிவித்திருக்கிறார்.
தோனி தொடர்ந்து இருந்தார்
இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசும்பொழுது ” நீங்கள் இந்திய அணியில் திறமைக்காக ஆதரிக்கக் கூடிய சிலர் இருக்கிறார்கள். நிதீஷ் குமார் ரெட்டியின் தேர்வை நான் புரிந்து கொள்கிறேன். அதே சமயத்தில் அவர் முதல் தர கிரிக்கெட்டில் எந்த சாதனையும் செய்யவில்லை. இந்தியாவில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் குறைவு என்பதால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது”
“இதன் காரணமாக அவருக்கு உடனடியாக உயர்ந்த மட்டத்தில் வாய்ப்பு கொடுக்க நீங்கள் விரும்புகிறீர்கள். குறிப்பிட்ட காலத்தில் அவரது திறமையை வளர்த்த நினைக்கிறீர்கள். நீங்கள் இதே போல ஜடேஜாவை உருவாக்க நினைத்தீர்கள். ஆனால் அப்பொழுது ஜடேஜா உடன் மகேந்திர சிங் தோனி இருந்தார். அவர் அவரை உருவாக்கினார்”
இதைத்தான் செய்ய வேண்டும்
” சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இப்பொழுது தான் வாஷிங்டன் சுந்தர் விளையாட வாய்ப்பு பெற்று இருக்கிறார். ஆனால் நீங்கள் அவரை உடனடியாக ஆல்ரவுண்டர் என்று சொல்கிறீர்கள். நிதீஷ் குமார் ரெட்டியையும் அப்படியே சொல்கிறீர்கள். ஆனால் இதற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் எடுக்கும்”
இதையும் படிங்க : கம்பீர் மேல் கடுப்பான பிசிசிஐ.. காரணம் தோல்வி கிடையாது.. பிப்ரவரியில் காத்திருக்கும் செக் – வெளியான தகவல்கள்
” முதலில் நீங்கள் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பிளேயராக இருக்க வேண்டும். அதாவது நீங்கள் ஒரு பேட்டராகவோ அல்லது பவுலர் ஆகவோ இருக்க வேண்டும். இப்போது உண்மையில் நிதீஷ் குமார் ரெட்டி யார்? எனவே முதலில் நீங்கள் ஒரு துறையில் சிறந்தவராக மாற வேண்டும். ஜடேஜா முதலில் தொடர்ந்து தன்னை பந்துவீச்சாளராகவே வளர்த்துக் கொண்டார். பிறகு அவர் ரஞ்சி கிரிக்கெட் விளையாடி பேட்ஸ்மேனாக தன்னை மாற்றிக் கொண்டார். இப்படித்தான் ஆல்ரவுண்டரை உருவாக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






