தற்போது இந்திய டெஸ்ட் அணியின் தோல்வியை தாண்டி கம்பீர் செய்துள்ள ஒரு காரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்தை கோபமடைய வைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
இந்திய அணி அடுத்த ஆண்டு 2026 இல் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கையில் விளையாட இருக்கிறது. இதற்கு நடுவில் முழுமையாக வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுகிறது. முக்கியமாக டி20 உலக கோப்பை பிப்ரவரி மாதத்தில் இருக்கிறது.
கம்பீர் செய்த தவறு
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அந்த மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் மோசமாக இருந்தது. இதன் காரணமாக அந்த ஆடுகள தயாரிப்பாளர் மேல் நிறைய விமர்சனங்கள் வெளியாகின.
இந்த நிலையில் தாங்கள் கேட்டபடியே ஆடுகளம் கொடுக்கப்பட்டதாக கம்பீர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் மற்றவர்களை காப்பாற்றுவதற்காக கம்பீர் பழியை ஏற்றுக்கொண்டார் என்று இரண்டாவது டெஸ்ட் போட்டி முன்பாக தெரிவித்து இருந்தார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் கோபம்
முதல் டெஸ்ட் போட்டிக்கு கொடுக்கப்பட்ட தரம் இல்லாத ஆடுகளத்திற்கு ஆதரவாக கம்பீர் பேசியது இந்திய கிரிக்கெட் வாரியத்தை கோபமடைய வைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியை தோற்று விட்டு கம்பீர் பேசியதும் அதிருப்தியை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : கம்பீர் கோச் பொறுப்புக்கு செட் ஆக மாட்டார்.. அதுக்கு முக்கியமான காரணம் இதுதான் – ஏபி டிவிலியர்ஸ் பேட்டி
இந்த நிலையில் பிப்ரவரி மாதம் இந்தியாவில் தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்தால், பிசிசிஐ கம்பீர் மேல் உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என கூறப்படுகிறது. டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி வீரர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என பிசிசிஐ அமைதி காப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது கம்பீருக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.






