நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆயுஷ் பதோனியை இந்திய அணிக்கு ஏன் தேர்வு செய்தார்கள்? என்று தனக்கு புரியவில்லை என ராபின் உத்தப்பா கூறியிருக்கிறார்.
இந்தத் தொடரில் இடம்பெற்று இருந்த வாஷிங்டன் சுந்தர் முதல் ஒருநாள் போட்டியின் போது இடுப்பு பகுதியில் காயமடைந்து தொடரை விட்டு வெளியேறினார். இதன் காரணமாக இவருடைய இடத்திற்கு டெல்லி மாநில அணிக்காகவும், ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காகவும் விளையாடும் ஆயுஷ் பதோனி தேர்வு செய்யப்பட்டார்.
இதுகுறித்து பேசி உள்ள ராபின் உத்தப்பா கூறும் பொழுது “இந்தப் பையனை எதற்காக தேர்வு செய்தார்கள் என்பது குறித்து எனக்கு எதுவுமே பிடிப்பட மாட்டேன் என்கிறது. இது குறித்து எனக்கு எதுவுமே புரியவில்லை. எனவே நான் அவருடைய புள்ளி விபரங்கள் எப்படி இருக்கிறது என்று பார்த்தேன். அவருக்கு திறமை இருக்கிறது என்று தெரிகிறது. ஆனால் இந்திய அணிக்கு விளையாடும் அளவுக்கு தயாராகி விட்டாரா என்று தெரியவில்லை”
” உண்மையைச் சொன்னால் இந்த வீரர் மிகச் சிறப்பாக உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடினார் என்று சொல்ல முடியாது. இந்திய ஏ அணியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க தொடரில் மூன்று நல்ல ஸ்கோர்கள் எடுத்திருக்கிறார். பிறகு விஜய் ஹசாரே டிராபியில் விளையாடி நான்கு விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். இதன் காரணமாக கீழ் வரிசையில் கொஞ்சம் ரன்கள் எடுத்து, பந்து வீசுவார் என இவரை தேர்வு செய்து இருக்கிறார்கள். ஆனால் இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை”
“மேலும் தற்போது எந்த மாதிரியான இந்திய அணியை தேர்வு செய்தாலும் துருவ் ஜுரல் பெயரை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இந்திய அணி நிர்வாகம் அவரை விரும்புகிறது என்பது போல தெரிகிறது. அதே சமயத்தில் அவர் டெஸ்ட் கிரிக்கெட் தாண்டி இன்னும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு தன்னை நிரூபிக்கவில்லை”
இதையும் படிங்க : எங்க பிளான் அப்ரோச் இப்படிப்பட்டது தான்.. இன்னைக்கு நாங்க விட மாட்டோம் – இந்திய அணிக்கு பிலிப்ஸ் சவால்
“மேலும் வாசிங்டன் சுந்தர் இடத்திற்கு ரியான் பராக் உடல் தகுதியுடன் இருந்திருந்தால் சரியானவராக இருந்திருப்பார். துரதிஷ்டவசமாக தற்பொழுது அவர் காயம் அடைந்திருக்கிறார். அவர் காயம் சரியாகி வருவதற்கு மூன்று முதல் நான்கு வாரங்கள் ஆகிவிடும். அதற்குள் ஒட்டுமொத்த தொடரே முடிந்துவிடும் என்று கூறியிருக்கிறார்.