யுவராஜ் சிங்கை விராட் கோலி மரியாதையாக நடத்தவில்லை.. அவர் இப்படித்தான் இருந்தார் – ராபின் உத்தப்பா பேச்சு

0
42
Virat

இந்திய அணி இரண்டு உலக கோப்பைகள் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த யுவராஜ் சிங்கை அவரது கடைசி காலத்தில் கேப்டனாக இருந்த விராட் கோலி சரியாக நடத்தவில்லை என ராபின் உத்தப்பா குற்றம் சாட்டி இருக்கிறார்.

2017 ஆம் ஆண்டு விராட் கோலி முழுநேர கேப்டனாக இந்திய அணிக்கு வந்த பிறகு, யுவராஜ் சிங் ஒரு சில போட்டிகளில் மட்டும் விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வெள்ளைப் பந்து போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார். இந்த நேரத்தில் கேப்டனான விராட் கோலி அவரை சரியான முறையில் நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.

- Advertisement -

உடல் தகுதி பிரச்சனை

“யுவராஜ் சிங் உடல் தகுதியில் இரண்டு புள்ளிகள் பெறவில்லை. பிறகு அவர் அணிக்கு வெளியே இருந்தார். மீண்டும் அவர் உடல் தகுதியில் உழைத்து மீண்டும் அணிக்குள் வந்தார். ஆனால் அவருக்கு சரியான போட்டி அமையவில்லை. இதன் காரணமாக அவர் மீண்டும் அணியில் தன்னுடைய இடத்தை இழந்தார். அந்த நேரத்தில் தலைமையில் இருந்த கேப்டன் விராட் கோலி அவரை நல்ல முறையில் உபசரிக்கவில்லை”

“அந்த மனிதர் புற்றுநோயை வென்றார். சர்வதேச கிரிக்கெட் பக்கம் வர முயற்சி செய்தார். அவர் எங்களுக்காக இரண்டு உலகக் கோப்பைகளை மிகச் சிறப்பான பங்களிப்புகளை கொடுத்து வென்றவர். அப்படிப்பட்ட ஒரு வீரரை பற்றி நீங்கள் பேசும் பொழுது அவருக்கு நுரையீரல் செயல்பாடு குறைந்துவிட்டது என்றும், அவருடன் இருந்து அதை நீங்கள் பார்த்ததாகவும் வெளியில் கூறுகிறீர்கள்”

- Advertisement -

விராட் கோலி இப்படிப்பட்ட கேப்டன்தான்

“விராட் கோலியின் தலைமையின் கீழ் நான் அதிகம் விளையாடியது கிடையாது. விராட் கோலி என்னுடைய வழி தனி வழி என்கின்ற வகையைச் சேர்ந்த கேப்டனாகவே இருந்தார். ஆனால் நீங்கள் உங்கள் அணி வீரர்களை எப்படி நடத்துகிறீர்கள்? என்பது முக்கியமானது. ஏனென்றால் இது அணி வெற்றி பெறுவது பற்றி மட்டுமே கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் கிட்ட இருக்க இந்த திறமை யார்கிட்டயும் இல்லை.. ஆனா அவர் அதை உணரல – அஸ்வின் பேச்சு

இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கம்பீர் பற்றி பலவிதமான குற்றச்சாட்டுகளை கூறிவரும் நிலையில், தற்போது ராபின் உத்தப்பா விராட் கோலி கேப்டன் பொறுப்பில் யுவராஜ் சிங்கை சரியாக உபசரிக்கவில்லை என்று ராபின் உத்தப்பா குற்றம் சாட்டி இருப்பது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை பெரிதாக கிளப்பி இருக்கிறது.

- Advertisement -