இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம் இருக்கும் தற்காப்பு ஆட்டம் போல உலகத்தில் யாரிடமும் தான் பார்க்கவில்லை என கூறியிருக்கிறார்.
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் மிகவும் அதிரடியான ஆட்டத்தை விளையாடக் கூடியவராக இருக்கிறார். மிகவும் ஆபத்தான ஷாட்டை விளையாடி ஆட்டம் இழக்க கூடியவராகவும் இருக்கிறார். இதன் காரணமாக அவருக்கு பாராட்டு விமர்சனம் என கலந்து மாறி மாறி வந்து கொண்டே இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரிஷப் பண்ட்டின் சிறப்பு திறமை
இது குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “ரிஷப் பண்ட் தற்காப்பு ஆட்டம் விளையாடி அரிதாகவே ஆட்டம் இழப்பார். உலக கிரிக்கெட்டில் அவரிடம் சிறந்த தற்காப்பு ஆட்டம் இருக்கிறது. தற்போது தற்காப்பு ஆட்டம் சவால் ஆனதாக மாறி இருக்கிறது. அவர் மென்மையான கைகளில் அருமையாக விளையாடுவார். நான் அவருக்கு வலைகளில் பந்து வீசி இருக்கிறேன். ஆனால் அவரை என்னால் அவுட் செய்ய முடிந்ததில்லை. அவர் நிறைய ஷாட் விளையாடுவதால் நிறைய போராடுகிறார் என்பதை அவரிடம் சொல்ல முயற்சி செய்தேன்”
“சிட்னியில் ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் இரண்டு வெவ்வேறான முறையில் விளையாடி காட்டினார். முதல் இன்னிங்ஸில் உடம்பில் எல்லா பக்கத்திலும் அடி வாங்கி 40 ரன் எடுத்தார். அடுத்து அதிரடியாக விளையாடி 60 பிளஸ் ரன்கள் எடுத்தார். ஆனால் அவர் முதலில் எடுத்த ரன் யாரும் பேசாததாக மாறிவிட்டது. உடனே அவரது அதிரடி ஆட்டத்தை பற்றி எல்லோரும் பாராட்ட ஆரம்பித்து விட்டார்கள்”
ரிஷப் பண்ட் இன்னும் உணரவில்லை
“அவர் நிலைத்து நின்று விளையாட முயற்சி செய்ய வேண்டும். அவர் உள்நோக்கத்துடன் விளையாடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் நாம் சொல்ல வேண்டும். அவர் அதிக ரன்கள் இப்பொழுது எடுக்கவில்லை. ஆனால் அப்படியான பேட்ஸ்மேன் போல் அவர் கிடையாது. அவர் இன்னும் தனது முழு திறனையும் உணரவில்லை”
இதையும் படிங்க : கல் எறிவது எளிது.. கோலி ரோஹித்துக்கு கங்குலி சொன்ன வார்த்தை செட் ஆகும் – இந்திய முன்னாள் வீரர் பேட்டி
“ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் ஸ்லாக் ஸ்வீப் என அவர் எல்லா ஆபத்தான ஷாட்டையும் வைத்திருக்கிறார். அவர் ஒவ்வொரு போட்டியிலும் 200 பந்துகளை எதிர் கொண்டால் அவர் பெரிய ரன்கள் எடுப்பார். அவர் மிடிலில் வந்து ஆட்டத்தை இணைத்து விளையாடினால் நிச்சயம் சதம் அடிப்பார்” என்று கூறியிருக்கிறார்.