இந்திய கிரிக்கெட்

விராட் ரோஹித் இதை மறைக்கிறாங்க.. சரியான நேரத்தில் அவங்களே உண்மையை சொன்னால் நல்லது – ஆர்சிபி முன்னாள் வீரர்

இந்தியா கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகின்றனர். வருகிற 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவார்கள் என்று தருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர்கள் இருவரும் ஓய்வு பெற்றது தனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவதாக சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஓய்வு பெற்ற விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடி வந்தனர். ஆனால் ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு இவர்கள் இருவருமே டெஸ்ட் பார்மெட்டிலும் ஓய்வு அறிவித்தது பலரிடையே ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

பொதுவாக வீரர்கள் குறைந்த ஃபார்மேட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தும் நிலையில் இவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வருவது கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியில் சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையில் இது குறித்து பேசி இருக்கும் ஆர்சிபி முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா இவர்கள் இருவரின் ஓய்வு சாதாரணமாக நடந்ததாக தோன்றவில்லை என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரையும் ஓய்வு பெறச் சொல்லி கட்டாயப்படுத்தப்பட்டதா? என்று தெரியாது. ஆனால் இந்த நிகழ்வு சாதாரணமாக நடந்ததாக தோன்றவில்லை. இதன் உண்மைத்தன்மை என்ன என்பதை அவர்களே தகுந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் இது நிச்சயமாக இயல்பாக இருக்காது என்று எனக்கு தோன்றுகிறது. ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் ரன்கள் எடுக்காத போது அவர் ஆறு மாத காலம் ஓய்வு பெற்று தனது உடல் தகுதியில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்தேன்.

இதையும் படிங்க:நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்.. இந்திய அணியில் யாருக்கு எல்லாம் இடம் கிடைக்கும்

அவர் நிச்சயம் ரன்கள் எடுப்பார் என்று என் மனதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் இருந்தது. தற்போது இருவரும் ஒரு பார்மெட்டில் விளையாடி வரும் நிலையில் அவர்கள் இருவரது கண்களிலும் இருக்கும் பசியை நீங்கள் காணலாம். உள்ளூர் கிரிக்கெட்டில் இவர்கள் இருவரையும் சாதிப்பதை பார்க்கும்போது ஒரு சர்வதேச மூத்த அனைத்தையும் சாதித்த கிரிக்கெட் வீரர்கள் இடமிருந்து பார்ப்பது நன்றாக இருக்கிறது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by