இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியானது இன்று நடைபெற உள்ள நிலையில் இதற்காக இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ராபின் உத்தப்பா வாஷிங்டன் சுந்தர் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி இந்த தொடரில் ஒரு போட்டியில் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் தோல்வி என இருக்கும் நிலையில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் இருக்கிறது. மேலும் டாப் வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி வரும் பட்சத்தில் இறுதிக்கட்டத்தில் பேட்டிங் வரிசை நிலைத்தன்மையற்று இருப்பதால் இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.
மேலும் பினிஷிங் ரோலில் விளையாடி வரும் ரவீந்திர ஜடேஜா அடுத்த ஒரு நாள் உலகக் கோப்பையோடு ஓய்வு பெற இருக்கும் நிலையில் அவருக்கு அடுத்ததாக வாஷிங்டன் சுந்தரை அந்த இடத்திற்கு நிரப்ப வேண்டும் என உத்தப்பா சில முக்கிய விஷயங்களை பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “என்னைப் பொறுத்தவரை வாஷிங்டன் சுந்தர் வளர்க்கப்பட வேண்டும். மேலும் ரவீந்திர ஜடேஜா தற்போது விளையாடி வரும் நிலையில் அவருக்கு அடுத்து அந்த இடத்தை நிரப்ப வாஷிங்டன் சுந்தர் தயாராக இருக்க வேண்டும். 2027 ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு ஜடேஜாவுக்கு மாற்று வீரராக வாஷிங்டன் சுந்தரால் அந்த இடத்தை நிறைவு செய்ய முடியும்.
இதையும் படிங்க:ஹர்திக் பாண்டியாவுக்காக நீக்கப்பட்ட இந்த வீரர்தான்.. அடுத்த 2 வருஷத்துல எல்லா வடிவ கிரிக்கெட்டும் ஆடுறவரா இருப்பார் – முகமது கைஃப்
அந்த மனநிலை அவருக்கு நிச்சயமாக இருக்கிறது. அதற்குள் அவர் நடுவில் அதிக பந்துவீச்சு நேரம் பெறுவார். ஏனென்றால் நாம் பார்க்கிற படி இந்தியாவில் பேட்டிங் பங்களிப்பு அளிக்கக்கூடிய அதிகமான ஆப் ஸ்பின்னர்கள் கிடையாது. எனவே வாஷிங்டன் சுந்தர் வளர்க்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என அவர் பேசியிருக்கிறார்.






