இன்று இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில் அதற்கு பிறகு இந்த இரண்டு அணிகள் போதும் டி20 போட்டிகள் கொண்ட தொடரானது நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா மீண்டும் இந்திய அணிக்குள் இணைந்திருக்கும் நிலையில், வெளியேறிய வீரர் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது கைப் சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் அடுத்ததாக இந்திய அணி விளையாடும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரானது வருகிற 9ம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆல் ரவுண்டர் ஹார்த்திக் பாண்டியா காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் இந்திய அணியில் இணைந்திருக்கிறார்.
அவருக்கு பதிலாக டி20 அணியில் இடம் பிடித்திருந்த ரிங்கு சிங் தற்போது இந்திய அணியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் முகமது கைஃப் ரிங்கு சிங் நீக்கப்பட்டது நியாயமானது தான் என்று பேசி இருக்கிறார். அதாவது அவருக்கு பதிலாக வேறு யாரையும் அணியில் இருந்து நிக்க முடியாது எனவும், ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்து அனைத்து வடிவம் கிரிக்கெட்டிலும் விளையாடும் நபராக இருப்பார் என்று பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “ஹர்திக் பாண்டியா திரும்பவும் வந்தால் நீக்கப்படக்கூடிய வீரர் வேறு யாரும் இருக்க முடியாது. அடுத்த உலக கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளதால் அதில் சஞ்சு சாம்சன் உறுதியாக இருப்பார். ஜித்தேஷ் ஷர்மா இந்திய அணிக்குள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவதில்லை. எப்படியும் அவரால் இந்த பிளேயிங் லெவனில் இடம் பிடிக்க முடியாது. பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஹர்திக் பாண்டியா உள்ளே வந்திருக்கும் போது நீக்கப்படக்கூடிய வீரர் ரிங்கு மட்டுமே ஆகும்.
இதையும் படிங்க:வாஷிங்டன் சுந்தர் தன்னம்பிக்கையை குறைக்க மாட்டோம்.. எங்க தேவை அந்த 20 ஓவர்தான் – இந்திய துணை பயிற்சியாளர் பேட்டி
ஆனால் இது நியாயமற்றது என்று ரிங்கு நினைத்திருக்கலாம். ஆனால் வேறு யாரை கைவிடுவீர்கள்? ரிங்குவின் காலம் வரும். இப்போது நான் சொல்கிறேன், அடுத்த இரண்டு வருடங்களில் அவர் இந்திய அணிக்காக அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடிய வீரராக இருப்பார்” என்று முகமது கைப் பேசி இருக்கிறார்.






