அம்பதி ராயுடுக்கு விராட் கோலி அநீதி செய்தார்.. இது கொஞ்சமும் நியாயம் இல்லை – ராபின் உத்தப்பா பேட்டி

0
271
Virat

2019 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அம்பதி ராயுடு விளையாட முடியாமல் போனதற்கான முக்கிய காரணம் அப்போதைய கேப்டன் விராட் கோலிதான் என இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா குற்றம் சாட்டி இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட்டில் அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்று பார்க்கப்பட்டவர் அம்பதி ராயுடு. விராட் கோலிக்கு முன்பாகவே உள்நாட்டு கிரிக்கெட்டில் பல இந்திய முன்னாள் வீரர்களால் கவனிக்கப்பட்டு வந்தவர். இந்த நிலையில் இந்திய அணியில் உலகக் கோப்பை மிக அருகில் இருந்த பொழுது திடீரென அணியில் இருந்து அம்பதி ராயுடு நீக்கப்பட்டது அப்போது பரபரப்பான சம்பவமாக மாறியது.

- Advertisement -

எம்எஸ்கே பிரசாத் பிரச்சனை

அப்போது தேர்வுக்குழுவின் தலைவராக எம்எஸ்கே பிரசாத் இருந்தார். அவருக்கும் தனக்கும் இடையில் இருந்த தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவே அவர் தன்னை உலகக்கோப்பை இந்திய அணியில் இருந்து நீக்கிவிட்டார் என அம்பதி ராயுடு சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். பிறகு அதற்கு எம்எஸ்கே பிரசாத் அவர் தரப்பில் இருந்து விளக்கம் கொடுத்திருந்தார்.

இப்படியான நிலையில் அம்பதி ராயுடு இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் அப்போதைய கேப்டன் விராட் கோலி தான் என தற்போது இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா பேசி மீண்டும் பரபரப்பை வேறு வகையில் கிளப்பியிருக்கிறார். அவரது பேச்சை குற்றச்சாட்டாகவே பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலி செய்தது நியாயம் இல்லை

இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசும்பொழுது “விராட் கோலிக்கு யாரை பிடிக்கவில்லையோ அல்லது அவர் யாரை நல்லவர்கள் என்று நினைக்கவில்லையோ அவர்கள் உடனே இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்கள். இதற்கு மிக முக்கியமான சிறந்த உதாரணம் அம்பதி ராயுடுதான். இங்கு எல்லோருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள் இருக்கிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் இதற்காக ஒரு வீரரை நீங்கள் கூண்டில் அடைக்க முடியாது”

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால்தான் ஓபனர்.. முதல் 5 இடத்தில் இந்த பேட்ஸ்மேன்கள் இருக்கணும் – சுனில் கவாஸ்கர் தேர்வு

“உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக உலகக் கோப்பை உடைகள் மற்றும் அவருடைய கிட் பேக் என அனைத்தையும் அம்பதி ராயுடு தயார் செய்து வைத்து, அவருடைய வீடு வரை அவர் உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று நினைத்த பொழுது, அவரை திடீரென இந்திய அணியில் இருந்து நீக்கி விராட் கோலி செய்தது கொஞ்சமும் நியாயம் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -