2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியை தேர்வு செய்வதில் பெரிய பிரச்சினையாக யாரை தொடக்க ஆட்டக்காரராக கொண்டு வருவது? என்பது இருக்கிறது. ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரையில் கில் சிறந்த புள்ளி விவரங்களை வைத்திருக்கிறார். ஆனால் அவரது பார்ம் தற்போது சரியில்லை. அதே சமயத்தில் ஜெய்ஸ்வால் சிறந்த பார்மில் இருக்கிறார்.
என்னுடைய தேர்வு ஜெய்ஸ்வால்தான்
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசும்பொழுது ” இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக இந்திய தேர்வாளர்கள் யாரை தேர்வு செய்யப் போகிறார்கள்? என்னைப் பொறுத்தவரையில் அது இடது வலது கலவையை கொடுக்கக்கூடிய இடதுகை பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால்தான். ஒரு வலதுகை பேட்ஸ்மேனுக்கு வீசும் பந்து இடதுகை பேட்ஸ்மேனுக்கு அகல பந்தாக வெளியில் செல்லும். எனவே இது மிகவும் முக்கியமான கலவையாக இருக்கும்”
” அதே சமயத்தில் நீங்கள் மிடில் ஆர்டரிலும் ஒரு இடது கை ஆட்டக்காரரை வைத்துக் கொள்ள வேண்டும். இப்படி நீங்கள் செய்யும் பொழுது எதிரணி பந்துவீச்சாளர்களுக்கு அது ஒரு பெரிய பிரச்சினையாக மாறும். இதற்காக நீங்கள் இடது கை பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டை உங்களுடைய விளையாடும் அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும்”
முதல் ஐந்து பேர் இவர்கள்தான்
“நம்பர் மூன்றில் விராட் கோலி நான்கில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஐந்தில் ரிஷப் பண்ட் ஆகியோர் இருக்க வேண்டும். இது கில்லுக்கு கடினமான ஒரு முடிவாக இருக்கலாம். ஆனால் தற்போது அவருடைய பார்ம் சரியாக இல்லை. ஆஸ்திரேலியாவிலும் அவருக்கு சுமாரான டெஸ்ட் தொடரே அமைந்திருந்தது என்று கூறி இருக்கிறார்”
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி 2025.. கம்மின்ஸ் தலைமையில் அறிவிக்கபட்ட பலமான ஆஸி அணி.. 3 முக்கிய மாற்றம்.. முழு விபரம்
இந்திய தேர்வுக்குழு கடந்த 12ம் தேதி சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணியை அறிவிக்க வேண்டி இருந்தது. ஆனால் இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கு முன்பாக அறிவிப்பதற்காக ஐசிசி இடம் ஒரு வாரம் கால அவகாசம் கேட்டிருக்கிறது. இதன் அடிப்படையில் வருகின்ற ஜனவரி 19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.