இவங்கதான் கோலிய கோபப்படுத்தினாங்க.. அங்க இருந்து தான் எல்லாம் ஆரம்பிச்சது – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
11607
Virat

நடப்பு ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே திடீரென சமூக வலைதளங்களில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பற்றி அதிகம் பேசப்பட்டது. மேலும் அவரை டி20 உலக கோப்பையில் தேர்வு செய்ய இந்திய தேர்வுக்குழு விரும்பவில்லை என்று பரப்பப்பட்டது. தற்போது இது குறித்து தினேஷ் கார்த்திக் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஆரம்பித்ததும் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்து கிரிக்கெட் வர்ணனையில் ஈடுபட்டிருந்த நியூசிலாந்தின் முன்னாள் வீரர் சைமன் டால் விமர்சனம் செய்திருந்தார். அவர் கடந்த ஆண்டும் இப்படியான விமர்சனங்களை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விராட் கோலி எப்பொழுதும் இல்லாத அளவுக்கு 155 பேட்டிங் 741 ரன்கள் குறித்து ஆரஞ்சு தொப்பியையும் வென்று இருக்கிறார்.

- Advertisement -

இந்தச் சம்பவங்கள் பற்றி பேசி இருக்கும் தினேஷ் கார்த்திக் “இந்த ஆண்டு விராட் கோலி எப்படி இருக்கிறார்? என்பது குறித்து என்னால் ஒரு புத்தகம் எழுத முடியும். அவர் மிக நன்றாகவே ஐபிஎல் சீசனை ஆரம்பித்தார். ஆனால் அவரை விமர்சனம் செய்த சைமன் டால் போன்ற இன்னும் சிலருக்கு நன்றி. அவர்கள் உண்மையில் விராட் கோலியை தூண்டி விட்டார்கள். விராட் கோலி சிறப்பாக செயல்படுவதற்கு தற்காலிகமாக இப்படியான விஷயங்களை எல்லாம் எடுத்துக் கொள்ளக் கூடியவர் என்று நான் நினைக்கிறேன்.

தன் குறித்து மற்றவர்கள் நினைப்பதை தவறு என்று அவர் நிரூபிக்க விரும்புகிறார். அவர் இதை வெளிய வந்து சொல்லாவிட்டாலும் கூட அவருடைய ஆர்வத்தை இது தூண்டுகிறது. மேலும் அவர் ஒரு எரிமலைக் குழம்பு போல இருக்கிறார். அப்படியான நேரத்தில் அவருக்கு பக்கத்தில் இருக்க எதுவாாலும் முடியாது. அவர் மீண்டும் மீண்டும் செய்து நிச்சயம் எரித்து விடுவார்.

இந்த ஆண்டு ஆர்சிபி-யின் வெற்றி மற்றும் பல விஷயங்கள் குறித்து பேசலாம். ஆனால் விராட் கோலி என்ற ஒரு மனிதர் இல்லாமல் இதுவெல்லாம் நடக்காது. இது பேட்டிங்கை வைத்து மட்டும் கூறவில்லை. களத்தில் இருக்கும் பொழுது அவர் கொடுக்கக்கூடிய மிரட்டல் உணர்வு.டைம் அவுட்டில் அவர் பீல்டர்களை தள்ளும் விதம், அந்த நேரத்தில் மைக் இருந்து மட்டும் கேட்டால் அது வேறு மாதிரி இருக்கும்.

- Advertisement -

இதையும் படிங்க : எங்க ஆள் ஸ்டார்க்.. ஐபிஎல்ல ஆரம்பத்துல சரியா ஆடாததுக்கு காரணம் இதுதான் – ரிக்கி பாண்டிங் விளக்கம்

இந்த மாதிரியான விஷயங்களுக்கு பென் ஸ்டோக்ஸ் கொஞ்சம் குறிப்பிடப்படுவார். ஆனால் இதைக் கடந்து பார்த்தால் விராட் கோலி சுமக்கும் தீவிரம் மற்றும் அவர் எல்லா வீரர்களும் நன்றாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார். நான் 17 வது ஆண்டில் அவருடைய செயல்பாட்டுக்காக என்னுடைய தொப்பியை கழட்டி மரியாதை செய்கிறேன். இப்படிப்பட்ட ஒரு வீரரை பெற்றதற்காக ஆர்சிபி ரசிகர்கள் நன்றியுடன் இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.