இந்திய அணி தற்பொழுது இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில். இதில் இந்திய அணி தேர்வில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு இருக்கும் சவால்கள் குறித்து ராபின் உத்தப்பா பேசியிருக்கிறார்.
இலங்கை அணிக்கு எதிராக முதலில் டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த அணிக்கான விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இங்கு கம்பீருக்கு தனிப்பட்ட முறையில் சஞ்சு சாம்சன் பேட்டிங் திறமை மிகவும் பிடித்தமானது. அதே சமயத்தில் ரிஷப் பண்ட் மூன்றாவது இடத்தில் விளையாடி டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இருந்தார்.
இதைவிட முக்கியமாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். நிச்சயமாக பிளேயிங் லெவனில் ஒருவருக்குதான் வாய்ப்பு கிடைக்கும். இருவரையும் விளையாட வைத்தால் ஸ்ரேயாஸ் ஐயர் வாய்ப்பை இழப்பார்.
ஆனால் கம்பீர் லக்னோ அணைக்கு மென்டராக இருந்து கேஎல்.ராகுலை மிகவும் நெருக்கமாக பார்த்திருக்கிறார், அதேபோல் இந்த முறை ஸ்ரேயாஸ் ஐயர் உடன் கொல்கத்தா அணியில் வேலை செய்திருக்கிறார். எனவே இந்த அனுபவத்தின் மூலமாக இதற்கு கம்பீர்தான் தீர்வு காணக்கூடிய இடத்தில் இருக்கிறார்.
இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசும்பொழுது “கேஎல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இருவருமே நம்ப முடியாத அளவுக்கு சிறப்பாக இருக்கிறார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் ராகுலின் செயல்பாடு அற்புதமானது. மேலும் ரிஷப் பண்ட் டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இருந்து வருகிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளில் இவருடைய செயல்பாடும் மிகச் சிறப்பாக இருந்திருக்கிறது. எனவே கம்பீர் மற்றும் ரோகித் சர்மாவுக்கு யாரை தேர்வு செய்வது என்பது பெரிய பிரச்சினையாக இருக்கும்.
இதையும் படிங்க : ஹர்திக்கை கேப்டன் ஆக்காததற்கு காரணம் காயமடைவது இல்லை.. ரோகித்தின் அந்த பழக்கம்தான் – சபா கரீம் பேச்சு
இருவரில் யாருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு என்ன மாதிரி காம்பினேஷன் அமைக்கப்படுகிறது? என்று பார்க்க வேண்டும். வீரர்களாக கிடைக்கும் வாய்ப்பு அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் அதை இரு கைகளால் பற்றி கொள்ள வேண்டும். இருவருக்குமே என்னுடைய வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன். யார் பக்கத்தில் அதிர்ஷ்டம் இருக்கிறதோ யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்கள் வாய்ப்பை பெறுவார்கள்” என்று கூறியிருக்கிறார்.