ஹர்திக்கை கேப்டன் ஆக்காததற்கு காரணம் காயமடைவது இல்லை.. ரோகித்தின் அந்த பழக்கம்தான் – சபா கரீம் பேச்சு

0
1608
Hardik

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படாமல் சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். இதற்குப் பின்னணியில் ஹர்திக் பாண்டியா அடிக்கடி காயமடைவது மட்டும் கிடையாது வேறு ஒரு காரணமும் இருப்பதாக முன்னாள் இந்திய வீரரும் தேர்வுக்குழு தலைவருமான சபா கரீம் கூறியிருக்கிறார்.

நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா இருந்தார். எனவே ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற காரணத்தினால் அடுத்த கேப்டனாக அவரே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூரியகுமார் கேப்டன் ஆக வந்தார். மேலும் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் ஹர்திக் பாண்டியாவுக்கு பணிச்சுமை அதிகம் என்பதால் கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லை என்று கூறினார்.

- Advertisement -

இதுகுறித்து தற்பொழுது சபா கரீம் பேசும் பொழுது “தற்போது விவாதிக்கப்படும் விஷயம் என்னவென்றால் கவுதம் கம்பீர் உடன் இணைந்து எப்பொழுதும் விளையாடக்கூடிய ஒரு வீரர் வேண்டும் என்பதாக நினைக்கிறார்கள். ஹர்திக் பாண்டியா காயத்தால் பாதிக்கப்படுகிறார் என்பது ரகசியமான ஒரு விஷயம் கிடையாது. அவருக்கு கேப்டன் பதவி கொடுக்காததற்கு இது மட்டுமே முக்கிய காரணம் இல்லை.

ரோகித் சர்மா விட்டுச் சென்ற பாரம்பரியம் இதற்கு பின்னால் இருக்கின்ற முக்கிய காரணம் என்று நான் நினைக்கிறேன். அதை தொடரக்கூடிய சரியான வீரராக அவர்கள் சூரியகுமார் யாதவை பார்க்கிறார்கள். முதலாவதாக சூரியகுமார் யாதவ் எப்பொழுதும் விளையாடக் கூடியவராக இருக்கிறார். மேலும் அவருடைய நடத்தை ரோகித் சர்மாவை போலவே இருக்கிறது.

- Advertisement -

சூரியகுமார் யாதவுக்கு டி20 கிரிக்கெட்டில் கேப்டன் பொறுப்பில் அனுபவம் இருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியா போன்ற ஒரு அணிக்கு எதிராக கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு தொடரையும் கைப்பற்றி இருக்கிறார். அந்தத் தொடரில் அற்புதமாக செயல்பட்டு அணியை மிகவும் ஒற்றுமையாக வைத்திருந்தார். மேலும் கேப்டன் பொறுப்பால் அவரது பேட்டிங் பாதிக்கப்படாமல் அதிலும் சிறப்பாகவே இருந்தார். இதெல்லாம்தான் அவரிடம் கேப்டன் பதவி செல்ல முக்கிய காரணம்.

இதையும் படிங்க : 163 ரன்.. 6 பேர் ஒற்றை இலக்கம்.. தனியாக மாஸ் காட்டிய ஷாருக்கான்.. பறந்த மெகா சிக்ஸர்கள்.. கோவை மதுரை அணியை வீழ்த்தியது

அதே சமயத்தில் டி20 உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியாவின் முதலில் துணை கேப்டன் அறிவித்திருக்கவே கூடாது. அது கொஞ்சம் கடுமையானது. அவர்கள் இந்த வகையில்தான் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தால் முன்கூட்டியே அவர்கள் சூரியகுமார் யாதவை துணை கேப்டனாக அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அப்பொழுது அணியில் ரோகித் சர்மா ராகுல் டிராவிட் ஆகியோர் இருந்தார்கள். மேலும் அணி நிர்வாகத்திலும் வேறு நபர்கள் இருந்ததால் இதைச் செய்யவில்லை. தற்பொழுது புதியவர்கள் வந்ததால், இந்த மாற்றம் நடந்திருக்கிறது என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -