நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த சூழ்நிலையில் மகேந்திர சிங் தோனி தூரத்தில் இருந்து அப்துல் சமாத்திற்கு அடித்த ஸ்டம்பிங் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த போட்டியை பொறுத்தவரை முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 இழப்புக்கு 166 ரன்கள் குவித்தது. இதில் லக்னோ அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது குறிப்பாக ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில் பேட்ஸ்மேன் அப்துல் சமாத் பத்திரானா வீசிய 19வது ஓவரின் இரண்டாவது பந்தை அடிக்க முயற்சிக்க அது வைடாக சென்று தோனியின் கைகளில் தஞ்சம் அடைந்தது.
இருப்பினும் இறுதி ஓவர் என்பதால் சிங்கிள் எடுக்க நினைத்து நான் ஸ்ட்ரைக்கர் பகுதியை நோக்கி ஓடுவார். அதை உடனே சுதாரித்து எம்எஸ் தோனி அவர் ஓடுவதற்குள் ஸ்டம்ப்புகளின் பின்னால் இருந்து பந்தை மேல் நோக்கி நன்றாக எறிவார். அந்தப் பந்து துல்லியமாக அப்துல் சமாத் கோட்டை அடைவதற்குள் எதிர் திசையில் இருந்த ஸ்டம்ப்புகளை தாக்கியது. இதில் ரன் அவுட் ஆன சமாத் 11 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட நிலையில் 2 சிக்ஸர்கள் அடித்து 20 ரன்னில் வெளியேறினார்.
ஒருவேளை அந்த ஓவர் அவர் களத்தில் நின்றிருந்தால் இன்னும் 15 ரன்கள் வரை லக்னோ அணி அடித்திருக்கலாம். இந்த நிலையில் எம்.எஸ். தோனி செய்த துல்லியமான ஸ்டம்பிங் தற்போது அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போட்டி முடிந்த உடன் லக்னோ கேப்டன் ரிஷப் பண்ட் எம் எஸ் தோனிஸ் அடித்த துரோ குறித்து அது எப்படி செய்தீர்கள், உங்களால் எப்படி செய்ய முடிந்தது என்று கேட்டார்.
அதற்கு உடனே பதில் அளித்த தோனி ” நான் எதையும் புதியதாக செய்யவில்லை, ஸ்டம்ப்களை பார்த்தேன் பார்த்தவுடன் பந்தை ஸ்டம்புகளை நோக்கி வீசினேன். அது ஒரு சில சமயங்களில் நன்றாக வேலை செய்யும், ஒரு சில சமயங்களில் வேலை செய்யாது அதுதான் மனநிலை” என்று தோனி கூறினார். இந்த சூழ்நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் மற்றும் சிஎஸ்கே முன்னாள் வீரருமான ராபின் உத்தப்பா தோனி செய்தது எதைச்சையான விஷயம் தான் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:இனி ஏமாத்தவோ தப்பிக்கவோ முடியாது.. உங்க பேட் இந்த அளவோடதான் இருக்கணும்.. களத்தில் சோதனை நடத்தும் நடுவர்கள்.. ஐபிஎல் 2025
முன்னாள் விக்கெட் கீப்பிரான அவர் தோனி செய்தது குறித்து பேசும் போது “நானும் அணிக்காக கையுறைகளை அணிந்து விளையாடியவன் தான். எனவே எம் எஸ் தோனி செய்தது ஒரு எதேச்சையான செயல்முறை தானே தவிர துல்லியமாக அவர் கணித்து செய்யவில்லை” என்று போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையில் கூறியிருக்கிறார். இருப்பினும் இதை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.