இனி ஏமாத்தவோ தப்பிக்கவோ முடியாது.. உங்க பேட் இந்த அளவோடதான் இருக்கணும்.. களத்தில் சோதனை நடத்தும் நடுவர்கள்.. ஐபிஎல் 2025

0
274

ஐபிஎல் 2025 சீசன் கிரிக்கெட் திருவிழா தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக 180 முதல் 200 ரன்கள் வரை அடிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு பேட்ஸ்மேன் பேட்டும் பேட்டிங் செய்வதற்கு முன்பாக நான்காம் கள நடுவரால் அவரது பேட் குறிப்பிட்ட அளவுகளுக்குள் இருக்கிறதா? என்று அளவீடு செய்யப்படும் என்று பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.

- Advertisement -

இனி தப்ப முடியாது

கடந்த இரண்டு வருடங்களில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல வியக்கத்தக்க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக சன்ரைசர்ஸ் அணி ஐந்து முறைக்கு மேல் 250 ரன்களைத் தாண்டி அடித்திருக்கின்றன. அதுபோலவே தற்போது லக்னோ, கொல்கத்தா, மும்பை மற்றும் பஞ்சாப் போன்ற அணிகளும் பலமான பவர் ஹிட்டிங் பேட்ஸ்மேன்கள் வரிசையை கொண்டு இருக்கின்றன. இதனால் பந்துவீச்சாளர்களுக்கு முற்றிலும் ஒரு சாதகமற்ற நிலையாகவே இந்த போட்டித் தொடர் அமைவதாக பல முன்னணி பந்துவீச்சாளர்களும் தங்களது குறைகளை கூறினார்கள்.

இந்த சூழ்நிலையில் பிசிசிஐ புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தனது முதல் பந்தை சந்திப்பதற்கு முன்பாக நான்காம் கள நடுவரால் தனது அளப்பானை வைத்து பேட்டின் நீல அகலம் மற்றும் உயரம் என அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று அளந்து பார்ப்பார். இவை அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே அந்த பேட்ஸ்மேன் தொடர்ந்து பேட்டிங் செய்ய அனுமதிக்கப்படுவார். இவ்வளவு நாட்களாக இல்லாத நடைமுறை திடீரென்று அறிமுகப்படுத்தப்பட்டது ஏன் என்று கேட்கலாம்.

- Advertisement -

பிசிசிஐ கையில் எடுக்கும் புதிய விதி

இந்த நடைமுறை முன்பே இருந்ததுதான் அதாவது போட்டி தொடங்குவதற்கு முன்பாக நடுவர்கள் ட்ரெஸ்ஸிங் ரூம் சென்று அனைத்து வீரர்களின் பேட்களை பரிசோதிப்பார்கள். அவர்கள் பரிசோதனை முடிந்து களத்திற்குள் வந்தவுடன் பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய வரும்போது வேறு பேட்டை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது. எனவே இத்தகைய சிக்கல்களை களைய பிசிசிஐ தற்போது இந்த நடைமுறையை கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு வீரரின் பேட் வடிவம் பின்வரும் பரிணாமங்களை தாண்டக்கூடாது.

இதையும் படிங்க:38க்கு 38.. விராட்ட பார்த்து ரிஷப் பண்ட் இத கத்துக்கணும்.. இல்லனா எதிர் டீம்ஸ் முடிச்சிருவாங்க – வாசிம் ஜாபர் அறிவுரை

அதாவது ஒருபேட்டின் அகலம் 10.8 சென்டிமீட்டருக்கு மேல் தாண்டக்கூடாது. மேலும் பேட்டின் ஆழமான பகுதி 6.7 சென்டிமீட்டர் ஆகவும் பேட்டின் விளிம்பு பகுதி 4.0 சென்டிமீட்டர் ஆகவும் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு மேல் எந்த விகிதத்திலும் அதன் அளவுகள் மாறக்கூடாது. இந்த அளவுகளுக்குள் இருந்தால் மட்டுமே ஒரு பேட்ஸ்மேன் பேட்டிங் செய்ய அனுமதிக்கப்படுவார். இது தற்போது நடைபெற்ற ஒரு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா, பில் சால்ட், ஹெட்மயர் போன்ற வீரர்களுக்கு களத்திலேயே நடுவர்கள் பேட்டின் அளவுகளை சரி பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -