“ராபின் மின்ஸ் அடுத்த பொல்லார்ட் கிடையாது.. அடுத்த தோனி” – தோனியின் பயிற்சியாளர் பரபரப்பு பேச்சு!

0
423
Robin

நடந்து முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து இரண்டு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஐபிஎல் அணிகளால் வாங்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஒருவர் ஜார்க்கண்ட் மாநில அணிக்காக விளையாடும் வலது கை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் குமார் குஸ்கரா. இவரை டெல்லி அணிக்கு 7.20 கோடிக்கு வாங்கி இருக்கிறார்கள். மேலும் டெல்லி அணியின் கங்குலி இவரை அடுத்த மகேந்திர சிங் தோனி என்கிறார்.

- Advertisement -

மற்றொருவர் 24 வயதுக்கு உட்பட்ட ஜார்க்கண்ட் மாநில அணியை வழிநடத்தும் இடது கை பேட்ஸ்மேன் ராபின் மின்ஸ். இவரை குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணி உடன் மோதி 3.60 கோடிக்கு வாங்கி இருக்கிறது. இவரை சஞ்சால் பட்டாச்சாரியா அடுத்த மகேந்திர சிங் தோனி என்கிறார்.

இதில் சஞ்சால் பட்டாச்சாரியா ஏற்கனவே மகேந்திர சிங் தோனிக்கும் பயிற்சியாளராக ஒரு முறை இருந்திருக்கிறார். இவர் ராபின் மின்ஸ் பற்றி கூறும் பொழுது, இவர் ஒரு இடது கை மகேந்திர சிங் தோனி என்கிறார்.

இது குறித்து அவர்பேசும் பொழுது “ராபின் மின்ஸ் இன்னும் தோனி ஆகவில்லை. அவர் எப்பொழுதும் இயல்பாக ஆக்ரோஷமாக பந்தை அடிக்கக் கூடியவர். அவர் இன்னும் தோனி போல் உருவாகவில்லை என்றாலும் கூட, தோனி என்னிடம் ஆரம்பத்தில் வந்த பொழுது 10 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தாலும், அதில் ஒரு சிக்ஸர் அடித்திருப்பார். ராபினும் அப்படிப்பட்டவர்தான். இந்த வகையில் இவர்கள் இருவரும் ஒரே மாதிரியானவர்கள்.

- Advertisement -

ராபினுக்கும் தோனிக்கும் இருக்கும் இன்னொரு ஒற்றுமை அவர்களுடைய நடத்தை. இவர்கள் இருவருமே அமைதியானவர்கள். ஆனால் இவர்களிடம் எதைப் பற்றி பேசினாலும் பேசுவார்கள். இவர்கள் மிகவும் கற்பதில் ஆர்வமானவர்கள். ராபினுக்கு விளையாட்டு உணவும்தான் முதலில் இருக்கும். ராபினிடம் கிரிக்கெட் பேசினால் நிறைய பேசுவார். அதுவே அவரை சாப்பிட வெளியே அழைத்துச் சென்றால், ராபின் வெவ்வேறு விதமான ஐந்து கோழிக்கறி உணவை ஆர்டர் செய்வார்.

பழங்குடி இனத்திலிருந்து ஐபிஎல் தொடருக்கு முதல் ஆளாக வந்தவர் ராபினாக இருக்கலாம், ஆனால் இன்னும் பல பேர் இவருக்கு அடுத்து வருவதற்கு சிறப்பான முறையில் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை!” என்று கூறியிருக்கிறார்!