தோனி செய்ததை நான் இளம் வயதிலேயே செய்கிறேன் – ரியான் பராக் கருத்து

0
642

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் முடிசம்பர் 23ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பெரும்பாலான அணிகள், புதிய வீரர்களை தேர்வு செய்வதற்காக தங்களது பழைய வீரர்களை விடுவித்தது. இதில் ராஜஸ்தான் அணி 9 வீரர்களை மினி ஏலத்திற்கு முன்பு விடுவித்தது. ஆனால் இளம் வீரர்கள் ரியான் பராக்கை அந்த அணி தக்க வைத்துக் கொண்டது .

- Advertisement -

21 வயதான ரியான் பராக் கடந்த இரண்டு ஐபிஎல் தொடரில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் ராஜஸ்தான் அணி தன் மீது நம்பிக்கை வைத்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் நான் அனைத்தையும் சிம்பிளாகவே எடுத்துக் கொள்வேன். ராஜஸ்தான் அணி சொல்லும் செய்தி இதுதான் .அவர்கள் என்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். 90% மக்களுக்கு அணியின் உள் என்ன நடக்கிறது என்று தெரியவே தெரியாது.

நான் பயிற்சி ஆட்டத்தில் எப்படி செயல்படுகிறேன், எப்படி ஆட்டத்திற்கு தயாராகிறேன் என்பது குறித்து எல்லாம் தெரியாது. அவர்கள் வெறும் போட்டி அன்று நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை பார்க்கிறார்கள். அதனால் தான் என் மீது பல விமர்சனங்கள் வருகின்றன. ஆனால் ராஜஸ்தான் அணி என்னுடைய திறமையை நன்கு அறிவார்கள் .அவர்கள் என் மீது நம்பிக்கை தொடர்ந்து வைத்து இருக்கிறார்கள். நான்கு ஆண்டுகள் அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள்.

தற்போது இது ஐந்தாவது ஆண்டு. என் மீது அவர்கள் வைத்த நம்பிக்கைக்கு நான் இம்முறை பேட்டிங்கில் நன்றி செலுத்துவேன். 2020 ஆம் ஆண்டு என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சரிவான ஆண்டு. அப்போது சஞ்சு சாம்சன் என்னிடம் வந்து பேசினார்கள். எனக்கு நம்பிக்கையை ஊட்டினார்கள். அவர்கள் பேசுவதை கேட்கும் போது நான் திறமையான வீரர் தான் என்று என்னால் உணர முடிந்தது.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் கடைசி கட்டத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமான ஒன்று. ஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் இறங்கி ஒரு சிலர் மட்டும் தான் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.எனக்கு தெரிந்து தோனி அந்த கலையின் மாஸ்டராக விளங்கினார். ஆனால் அந்த கடினமான பணியை நான் எனது இளம் வயதிலேயே செய்கிறேன். அதில் நான் இன்னும் கைதேறவில்லை .ஆனால் அந்த இடத்தில் நான் சாதிப்பேன் என நிச்சயம் நம்புகிறேன் என் அணியும் நம்புகிறது.