“சிஎஸ்கே-வில் ரிஷப் பண்ட்.. அடுத்து நடக்கும் ஆச்சரியம்!” – இந்திய முன்னாள் வீரர் பரபரப்பு ஸ்டேட்மென்ட்!

0
811
Dhoni

இந்திய கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனியின் இடத்தை நிரப்புவது என்பது யாருக்குமே மிகப்பெரிய கடினமான காரியம்.

ஏனென்றால் அவர் ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டும் இல்லாமல் கேப்டன், விக்கெட் கீப்பர் மற்றும் பினிஷர் என பல பரிணாமங்களில் மிகச்சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தக் கூடியவர்.

- Advertisement -

இப்படியான மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்ற பொழுது அவருடைய இடத்துக்கு என இளைஞராக கொண்டுவரப்பட்டவர்தான் ரிஷப் பன்ட். ஆனால் இவ்வளவு பெரிய பொறுப்பை அவரால் ஆரம்பத்தில் சுமக்க முடியவில்லை. நிறைய விமர்சனங்களை சந்தித்தார். அவர் விக்கெட் கீப்பிங்கும் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் தன்னை சரி செய்து கடுமையான பயிற்சியின் மூலம் திரும்ப வந்தவர் மிகச் சிறப்பான செயல்பாட்டை யாரும் எதிர்பார்க்காத வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கொடுத்தார். அதேபோல் யாரும் எதிர்பாராத வகையில் சாலை விபத்தில் சிக்கி அதிர்ச்சி தந்தார். தற்போது அவர் ஏற்பட்ட காயங்களில் இருந்து குணமடைந்து வருகிறார்.

மகேந்திர சிங் தோனி மற்றும் ரிஷப் பண்ட் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. தன்னுடைய குருவாகவே அவர் மகேந்திர சிங் தோனியை பார்க்கிறார்.

- Advertisement -

காயத்திலிருந்து மீண்டு வரும் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தற்பொழுது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபியில் நாக் அவுட் சுற்றில் டெல்லி அணிக்காக விளையாடுவார் என்று சில தகவல்கள் கூறுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் தீப் தாஸ் குப்தா கூறும்பொழுது ” 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ரிஷப் பண்ட்டை வாங்கினால் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் கிடையாது. ஏனென்றால் மகேந்திர சிங் தோனியும் அவரும் மிக நெருக்கமாக இருந்து வருகிறார்கள். ரிஷப் பண்ட் தோனியை மிகவும் மதிக்கிறார்.

அவர்களது தொடர்பு மற்றும் சிந்தனை ஒரே போக்கில் இருக்கிறது. அவர்களுடைய தாக்குதல் பாணி ஆட்டமுறை மற்றும் நேர்மறையான சிந்தனைகள் ஒன்றாக இருக்கின்றன. இவர்கள் எப்பொழுதும் வெற்றி பற்றி மட்டுமே யோசிக்கிறார்கள்!” என்று கூறியிருக்கிறார்!