“தோனி தோனி.. தாங்க முடியாம ரூம்ல அழுதேன்” – ரிஷப் பண்ட் மனம் திறந்த பேட்டி

0
454
Pant

இந்திய கிரிக்கெட்டில் மகேந்திர சிங் தோனியின் இடம் என்பது யாராலும் நிரப்பப்பட முடியாதது என்பதாகத்தான் கருதப்படுகிறது. ஏனென்றால் கேப்டன் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டிங்கில் ஃபினிஷர் என அவர் செய்த ரோல்களை இன்னொருவர் ஒட்டுமொத்தமாக செய்வது கடினம்.

இப்படி ஆனவரின் இடத்தை 19 வயதான இளைஞன் ரிஷப் பண்ட் 2017 ஆம் ஆண்டு நிரப்பி விடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தது, ரிஷப் பண்ட்டை மனரீதியாக வெகுவாக பாதித்தது. இதன் காரணமாக அவருடைய தனிப்பட்ட ஆட்டமும் பாதிக்கப்பட்டது. கூடவே விக்கெட் கீப்பிங் பாதிக்கப்பட்டது.

- Advertisement -

முதன்முதலாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி ரிஷப் பண்ட் இந்திய அணிக்காக அறிமுகமானார். அப்போது அவருடைய வயது 19. ஆனால் ஒரு லெஜெண்ட் இடத்தில் அவர் அணிக்கு வர வேண்டியதாக இருந்தது.

இந்த நேரத்தில் அவரிடம் இருந்து மகேந்திர சிங் தோனி செய்த அத்தனையையும் ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். மேலும் இளைஞரான அவர் தவறுகள் செய்யும் பொழுது, அவர் மீது ரசிகர்கள் வெளியில் இருந்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்கள். இந்த நேரத்தில் கேப்டனாக இல்லாத ரோகித் சர்மா வரைக்கும் ரிஷப் பண்ட்க்கு ஆதரவாக மீடியாவில் பேசினார்கள்.

தற்பொழுது ஆரம்ப காலத்தில் மகேந்திர சிங் தோனியுடன் தன்னை ஒப்பிட்டதால், தனக்கு என்ன நடந்தது என்பது குறித்து மனம் திறந்து ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ரிஷப் பண்ட் கூறும்போது “நான் அணியில் இடம் பிடித்த ஆரம்பத்திலேயே என்னை நோக்கி நிறைய கேள்விகள் முன்வைக்கப்பட்டன. ஏன் அப்படி நடக்கிறது? என்று எனக்கு புரியவில்லை. மக்கள்எல்லோரையும் ஒப்பிடுகிறார்கள். 5 போட்டியில் விளையாடு இருப்பவரை 500 போட்டிகள் விளையாடி இருப்பவரோடு எப்படி ஒப்பிட முடியும்?

இது ஒரு நீண்ட பயணம் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருக்கிறது. எனவே யாரையும் ஒப்பிடுவது தவறான ஒன்று என நான் உணர்கிறேன். மொஹாலி மைதானத்தில் நான் ஸ்டெம்பிங் செய்ய தவறி விட்டேன். அப்பொழுது கூட்டம் தோனி தோனி என்று கத்தியது. என்னால் அழுத்தத்தை தாங்க முடியவில்லை. மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்தது. நான் அறையில் அழுதேன்.

இதையும் படிங்க : எப்படி வேணாலும் விளையாடுவேன்.. கலக்கும் ஜெய்ஸ்வால் அரைசதம்.. அறிமுக பவுலருக்கு தொடரும் சோகம்

தோனி பாய் உடனான எனது உறவை எப்படி சொல்வது என்று எனக்கு புரியவில்லை. நீங்கள் சிலருடன் மற்றவர்களுடன் பேச முடியாத விஷயங்களையும் பேசலாம். எனக்கு தோனி பாய் அப்படியானவர். நான் நிறைய விஷயங்கள் பேசி இருக்கிறேன். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.