இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் 268 ரன்கள் எடுத்தால் கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து மண்ணில் யாரும் செய்யாத மிகப்பெரிய சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இந்த அணியில் முதன்மை விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் இடம் பெற்று இருக்கிறார். நிச்சயம் அவர் ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுவார் என்பது உறுதியானது.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றை எடுத்துக் கொண்டால் நிச்சயமாக விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்ற வரிசையில் ரிஷப் பண்ட் ஓய்வு பெறும் பொழுது மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி, தனிப்பெரும் வீரராகத்தான் ஓய்வு பெறுவார். பேட்ஸ்மேனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய எழுச்சி மிகப்பெரிய அளவில் இருக்கிறது.
இந்திய கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ளும் பொழுது டெஸ்ட் கிரிக்கெட் மகேந்திர சிங் தோனி தான் ஓரளவுக்கு சாதனைகளை வைத்திருக்கிறார். ஆனால் ரிஷப் பண்ட் இப்பொழுதே தோனியின் பல சாதனைகளை தாண்டக்கூடிய இடத்திற்கு வந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரிஷப் பண்ட் இங்கிலாந்து மண்ணில் விக்கெட் கீப்பராக எட்டு டெஸ்ட் போட்டிகளில் 511 ரன்கள் எடுத்திருக்கிறார். அதே சமயத்தில் மகேந்திர சிங் தோனி 778 ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் தோனியே இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் என்கின்ற பெரிய சாதனையையும் கைவசம் வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க : சாய் சுதர்சன் கோலி கிடையாது வில்லியம்சன்.. போன வருஷமே இங்கிலாந்துல பந்தை எடுத்துட்டு போனார் – அலெக்ஸ் ஸ்டூவர்ட் பேச்சு
தற்பொழுது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட்ட மேற்கொண்டு 268 ரன்கள் எடுத்தால், இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர் என்ற தோனியின் சாதனையை முறியடிப்பார். மேலும் ரிஷப் பண்ட் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தால், இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் ஆடம் கில்கிறிஸ்ட்டை தாண்டுவார். இந்த முறை இந்த இரண்டு சாதனைகளுமே தகர்க்கப்படும் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது!