இந்திய இளம் வீரர் சாய் சுதர்சன் விராட் கோலியின் இடத்தை நிரப்ப முடியாது எனவும் அவர் கேன் வில்லியம்சன் போன்றவர் எனவும், அவருடைய இங்கிலாந்து கவுண்டி அணி பயிற்சியாளர் அலெக்ஸ் ஸ்டூவர்ட் கூறியிருக்கிறார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடர்கான இந்திய அணியில் முதல்முறையாக இந்திய இளம் இடதுகை பேட்ஸ்மேன் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இவர் இங்கிலாந்து கவுண்டி அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பந்தை எடுத்துச் சென்று விட்டார்
இதுகுறித்து அலெக்ஸ் ஸ்டூவர்ட் கூறும்போது “அவர் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி முடித்துவிட்டு இந்தியா திரும்பும் பொழுது இங்கிருந்து சில டியூக்ஸ் பந்துகளை எடுத்துச் சென்றார். நான் அதற்காக அவரிடம் எதுவும் பணம் கேட்கவில்லை. அவரிடம் இப்படி முன்னோக்கி சிந்திக்கும் ஆற்றல் இருக்கிறது”
“தற்போது சாய் சுதர்சன் அந்த பந்துகளை வைத்து சிறப்பாக பயிற்சி பெற்றிருப்பார். இப்பொழுது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக இப்பொழுது வரும் பொழுது அந்த பந்தில் பயிற்சி செய்து நல்ல நம்பிக்கை உடன் இருப்பார். சாய் சுதர்சன் விளையாட்டை மிக விரைவாக கற்றுக் கொள்ளும் வீரர்”
அவர் விராட் கோலி கிடையாது
“சாய் சுதர்சன் விராட் கோலியின் இடத்தை நிரப்ப முடியாது. விராட் கோலி மிகப் பெரிய வீரர். சாய் சுதர்சன் விளையாட உள்ளே செல்லும் பொழுது நான் விராட் கோலி கிடையாது, அவருடைய இடத்தை நிரப்ப முடியாது என்று சொல்லிக் கொள்ள வேண்டும். அவர் சாய் சுதர்சனின் சிறந்த வெர்ஷன் ஒன்றை வெளியில் கொண்டுவர முயற்சி செய்வார் என்றால், இந்திய அணிக்கு சிறந்த பேட்ஸ்மேன் ஒருவர் கிடைத்து விடுவார்”
இதையும் படிங்க : கேப்டன் கில்லுக்கு இங்கிலாந்தில் நடந்த சோகம்.. இந்திய பத்திரிக்கையாளர் வெளியிட்ட தகவல் – என்ன நடந்தது?
“முதல் டெஸ்ட் போட்டி நடக்க இருக்கும் ஓவர் மைதானத்தில் வேகம் அதிகமாக இருக்கும். நீங்கள் பின் காலுக்கு சென்று பந்தை உங்கள் கண்களுக்கு கீழ் வைத்து, தாமதமாக விளையாட வேண்டும். இப்படி விளையாடும் பொழுது எட்ஜ் எடுத்தால் கூட பெரிதாக எதுவும் ஆகாது. கேன் வில்லியம்சன் இப்படித்தான் விளையாடுவார். சாய் சுதர்சனுக்கும் அப்படி விளையாடக்கூடிய தன்மை இருக்கிறது. இங்கிலாந்தில் அவரால் நல்ல முறையில் விளையாட முடியும்” என்று கூறியிருக்கிறார்.






