இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இதற்காக இந்திய அணி தீவிரமான முறையில் தயாராகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீது அதிருப்தியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் விளையாடிய நிலையில் அதில் விக்கெட் கீப்பராக இந்திய அணிக்கு கேஎல் ராகுல் செயல்பட்டார். முதல் இரண்டு போட்டிகளில் போதுமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும், மூன்றாவது போட்டியில் 40 ரன்கள் குவித்து தனது இருப்பை பதிவு செய்தார். மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேஎல் ராகுல் இந்திய அணிக்கு முதன்மை விக்கெட் கீப்பராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் மற்றொரு ஆஸ்தான விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் கார் விபத்துக்கு பிறகு டி20 உலக கோப்பை அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெற்றிருந்தாலும் அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் முதன்மை விக்கெட் கீப்பராக இருப்பதால் கௌதம் கம்பீர் மீது ரிஷப் பண்ட் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரிஷப் பண்ட் என பெயர் குறிப்பிடா விட்டாலும் முதன்மை விக்கெட் கீப்பர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பர்
இது தொடர்பாக வெளிவந்துள்ள அறிக்கையில் “தற்போதைய இந்திய விக்கெட் கீப்பர் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உடன் அதிருப்தியில் இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆடும் 11 அணியில் அவர் முதல் தேர்வாக இல்லை. 50 ஓவர் வடிவத்தில் அவர் தனது இடத்தை இழந்ததற்கு வெளிப்புற காரணம் ஏதேனும் இருப்பதாக அவர் கருதுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:நான் கோலி ரோஹித்தை விட சிறந்தவன்.. அப்படி நெனச்சதால எனக்கு இந்த விஷயம் நடந்துச்சு – ஷிகார் தவான் பேட்டி
அதாவது இந்த தொடரில் சஞ்சு சாம்சன் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரிஷப் பண்ட் 15 பேர் கொண்ட அணியில் இருந்தாலும் அவர் ஆடும் லெவன் அணியில் இடம் பெறவில்லை என்பதையே அந்த தகவல் உறுதிப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரிஷப் பண்ட்தான் கௌதம் கம்பீர் மீது அதிருப்தியில் இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.






