வீடியோ.. மைதானத்தின் மேற்கூரையை உடைத்த ரிஷப் பண்ட்.. பயிற்சியில் வெறிக்கொண்டு சிக்சர்

0
262

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன ரிஷப் பண்ட், கடந்த இரண்டு மாதங்களாக ஐபிஎல் தொடரில் ஒரு பூனை போல் பதுங்கி இருந்தார். 27 கோடி ரூபாய் கொடுத்து ரிஷப் பண்டை எடுத்தும் அவர் பெரிய அளவு சாதிக்கவில்லை.

எனினும் லக்னோ அணி கடைசியாக விளையாடிய இறுதி லீக் போட்டியில் ஆர் சி பி அணிக்கு எதிராக 61 பந்துகளில் 118 ரன்கள் குவித்தார். இந்த தொடரில் பண்ட்  மொத்தமாக 13 இன்னிங்ஸில் 269 ரன்கள் தான் அடித்து இருந்தார். ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடர் முடிவடையும் தருவாயில் தன்னுடைய ஃபார்மை மீட்ட நிலையில் இங்கிலாந்து தொடரில் அவர் பட்டையை கிளப்புவார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

- Advertisement -

பயிற்சியில் இந்திய வீரர்கள்:

இதுவரை பண்ட், இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒன்பது போட்டிகளில் விளையாடி 556 ரன்கள் அடித்து இருக்கிறார். இதில் இரண்டு சதம் அடங்கும். இதன் மூலம் தற்போதைய இந்திய அணியில் பண்ட் மிகவும் முக்கியமான வீரராக இருக்கின்றார்

விராட் கோலி, ரோகித் சர்மா  போன்ற ஸ்டார் வீரர்கள் இல்லாத நிலையில் பண்ட் பேட்டிங் எவ்வாறு இருக்கிறது என்பதை பொறுத்து இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அமையும். இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள கென்ட் மைதானத்தில் இந்திய வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

சாதிக்கும் உத்வேகத்தில் பண்ட்:

அப்போது ரிஷப் பண்ட் அடித்த சிக்சர் ஒன்று மைதானத்தில் இருந்த மேற்கூரையை சேதம் செய்து இருக்கிறது. இதனை பார்த்த அங்கிருந்து இந்திய வீரர்கள் பண்டை  பாராட்டினர். கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு கிண்டல்கள் கேலிகளை சந்தித்து வந்த பண்ட், தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டிய உத்வேகத்தில் இங்கிலாந்துக்கு வந்து இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க: பிக்பாக்கெட் உடன் தோனியை ஒப்பிட்டு பேசிய ரவி சாஸ்திரி.. ரசிகர்கள் கடும் கோபம்

இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது. பேட்டிங் வரிசையில் ஆறாவது வீரராக களமிறங்குவார் என தெரிகிறது. இங்கிலாந்து மண்ணில் வெறும் 11 ரன்கள் பண்ட், அடித்தால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்தில் அடித்த ரன்களை பண்ட் முறியடித்து விடுவார். இதனிடையே, இந்திய அணி வரும் 13ஆம் தேதி கேண்ட் மைதானத்தில் தங்கள் அணி வீரர்கள் பங்கேற்கும் இன்ட்ரா ஸ்குவாட் பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளனர்.

- Advertisement -