பிக்பாக்கெட் உடன் தோனியை ஒப்பிட்டு பேசிய ரவி சாஸ்திரி.. ரசிகர்கள் கடும் கோபம்

0
73

சர்வதேச கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்திருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையின் மகுடமாக தற்போது அவருக்கு ஐசிசி ஹால் ஆப் கௌரவம் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் இந்த கௌரவத்தை அடையும் 11 வது வீரர் என்ற பெயரை பெற்றார்.

தோனியை பாராட்டியுள்ள இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரும் கிரிக்கெட் வீரருமான ரவி சாஸ்திரி தோனியை பிக் பாக்கெட் உடன் ஒப்பிட்டு பேசி இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “தோனி விக்கெட் கீப்பிங் செய்யும்போது பிக் பாக்கெட் செய்பவரை விட அதிவேகமாக ஸ்டெம்பிங் செய்வார்.”

- Advertisement -

ரவி சாஸ்திரி சர்ச்சை கருத்து:

” இந்தியாவில் நீங்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் சரி. குறிப்பாக அகமதாபாத்தில் உங்களுக்கு பின்னால் தோனி இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் நிச்சயமாக உங்களுடைய மணி பர்ஸ் காணாமல் போய்விடும்.தோனி பேட்டிங்கில் டக் அவுட் ஆகவும் ஆகி இருக்கிறார்.”

“தோனி உலக கோப்பையும் பெற்றுக் கொடுத்திருக்கிறார். சதமும் அடித்து இருக்கின்றார். அவர் எப்போது எது செய்தாலும் , இதில் எந்த ஒரு வித்தியாசத்தையும் முகத்தில் நீங்கள் பார்க்க முடியாது. சச்சின் கூட கோபம் அடைவார். ஆனால், தோனி ஒரே மாதிரியான ரியாக்சன் தான்”

- Advertisement -

கிரிக்கெட்டையே மாற்றியவர்:

“ஏனென்றால் தோனியின் ரசிகர்களுக்கு அவரை அவ்வளவு பிடிக்கும் என்று ரவி சாஸ்திரி பாராட்டி இருக்கிறார். தோனி குறித்து பேசி உள்ள பிசிசிஐ துணைத் தலைவர் ராஜூவ் சுக்லா, ராஞ்சியில் உள்ள தெருவில் இருந்து தற்போது ஐசிசி ஹால் ஆப் பேம் என்ற கௌரவத்தை தோனி அடைந்திருக்கிறார். அவருடைய இந்த பயணம் சாதாரணமானது அல்ல.”

இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் 2025.. ஆஸி, தென்னாப்பிரிக்கா அணி விவரம்.. எந்த ஆன்லைன், சேனலில் பார்ப்பது?

“கடின உழைப்பும் வேட்கையும் இருந்தால் சாதிக்கலாம் என்பதற்கு தோனியின் கதை ஒரு நல்ல எடுத்துக்காட்டு. சின்ன நகரத்திலிருந்து வந்து கிரிக்கெட்டின் வரலாற்றையே தோனி மாற்றி பல கோடி மக்களின் இதயத்தையும் வென்று இருக்கிறார்” என்று அவர் பாராட்டியுள்ளார்.
தமக்கு கிடைத்த இந்த கௌரவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தோனி,” உலகம் முழுவதும் உள்ள பல தலைமுறைகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுடன் எனது பெயரும் இணைந்து இருப்பதை நினைத்து நான் பெருமை கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -