ரிஷப் பண்ட் உடல்நிலை குறித்து அப்டேட்.. மருத்துவர்கள் என்ன சொன்னார்கள்?

0
67

கார் விபத்தில் சிக்கி இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.இந்த நிலையில் ரிஷப் பண்டின்  உடல்நிலை குறித்து மருத்துவர்கள் சொன்ன தகவல் ரசிகர்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது.
பண்டின் உடல் நலத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் அவருக்கு எடுக்கப்பட்ட மருத்துவ சோதனையில், உள் காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிகிறது.

மூளை மற்றும் முதுகுத்தண்டில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ள மருத்துவர்கள், இதனால் சிக்கல் இல்லை என்று கூறியுள்ளனர். .மேலும் ரிஷப் பண்ட் உற்சாகமாக இருப்பதாகவும்,  தனது தாயிடம் பேசியதாகவும் மருத்துவமனை வட்டார தகவல் கூறியுள்ளனர். ரிஷப் பண்டிற்கு தசை நார் சிதைவு  போன்ற காயத்திற்கு மட்டும் தற்போது சிகிச்சை செய்தால் போதும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ரிஷப் பண்டிற்கு நெற்றியில் ஏற்பட்ட்ச் வெட்டு, முதுகில் உள்ள சிராய்ப்பிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதே போன்று  ரிஷப் பண்டை மும்பைக்கு கொண்டு செல்லவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளனர். இதே போன்று இந்திய கிரிக்கெட் அணியின்  மருத்துவ குழு ரிஷப் பண்டின்  எலும்பு முறிவு காயங்களுக்கு சிகிச்சை அளிக்க  உள்ளது.

இதுபோன்ற பண்டிற்கு மனது அளவில் ஏற்படும் பிரச்சினைக்கு மருத்துவர்கள் சிறப்பு சிகிச்சை அளிக்க உள்ளனர்.
இதனால் பண்ட் விரைவில் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால்  பிப்ரவரி மாதம் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வரும் டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட்,   பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பாக பண்ட் ஒரு வருடத்திற்கு எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் 6 மாதத்திற்கு முன்பே அவர் களத்திற்கு திரும்ப வாய்ப்பு உள்ளது. இதனால் புத்தாண்டு அன்று நல்ல செய்தி வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.