இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விலகி இருக்க எடுத்த முடிவு குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளையாடவில்லை. அவருடைய இடத்தில் கில் களம் இறங்கினார். மேலும் பும்ரா புதிய கேப்டனாக செயல்படுகிறார். இந்த நிலையில் அவர் விலகினாரா அல்லது அணி நிர்வாகத்தால் விலக்கப்பட்டாரா? என்ற கேள்விகள் வெளியில் சென்று கொண்டிருக்கிறது.
பொதுவாக ஒரு தொடரை வெல்லக்கூடிய வாய்ப்பிலோ அல்லது சமன் செய்யக்கூடிய வாய்ப்பிலோ இருக்கும்பொழுது அந்த அணியின் கேப்டன் காயம் அல்லது தனிப்பட்ட காரணங்களால் மட்டுமே விலகுவார். பார்ம் காரணமாக விலகி இருக்க மாட்டார். எந்த அணி நிர்வாகமும் தங்கள் கேப்டனை இந்த காரணத்திற்காக டிராப் செய்யாது. இதுவே கிரிக்கெட் உலகில் ஒரு நீண்ட கலாச்சாரமாக இருந்து வருகிறது.
இப்படியான நிலையில் இந்தத் தொடரை சமன் செய்ய ஐந்தாவது டெஸ்ட் போட்டியை வெல்ல வேண்டும் என்கின்ற நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முக்கிய போட்டியில் இருந்து விலகியது பரபரப்பான விஷயமாக மாறி இருக்கிறது. இது குறித்து வெளியில் நிறைய சந்தேகங்களும் கேள்விகளும் கேட்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ரிஷப் பண்ட் கூறும்போது “அவர் நீண்ட காலமாக எங்களுக்கு கேப்டன் ஆக இருந்து வந்த காரணத்தினால், இது மிகவும் உணர்ச்சிவசப்பட்ட ஒரு முடிவாக இருக்கிறது. உண்மையில் நாங்கள் அவரை வெறும் கேப்டனாக மட்டும் பார்க்கவில்லை. அவரை நாங்கள் எங்களுடைய தலைவராக எப்பொழுதும் பார்த்து வருகிறோம்”
இதையும் படிங்க : இந்திய அணியில் விரிசல் ஏற்பட்டிருப்பது உண்மை.. நான் நேரடியாக பார்த்தேன் – இந்திய பத்திரிக்கையாளர் பரபரப்பு தகவல்
“சில முடிவு எடுக்கும் இடங்களில் நீங்கள் கலந்து கொள்ள முடியாத இடங்களும் இருக்கின்றன. அது அணி நிர்வாகம் எடுக்கும் முடிவுகள். நான் இதுகுறித்து முடிவு எடுக்கப்பட்ட கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. எனவே ரோகித் சர்மா விளையாடாதது குறித்து ஏன் என்ன? என்று எனக்கு உண்மை தெரியாது. இதற்கு மேல் இந்த விஷயத்தை என்னால் விளக்க முடியாது” என்று கூறி இருக்கிறார்.