இந்திய அணியின் தற்போது பிளவு ஏற்பட்டு இருப்பதாக இந்தியாவின் மூத்த விளையாட்டு பத்திரிக்கையாளர் பாரத் சுந்தரேசன் பரபரப்பான தகவலை வெளியிட்டிருக்கிறார்.
இந்தியாவில் பாரத் சுந்தரேசன் மிகவும் பிரபலமான விளையாட்டு பத்திரிகையாளர் ஆவார். இந்த நிலையில் அவர் இந்திய அணியின் ஊழியர்களில் ஒருவரிடம் பேசியதாகவும், மேலும் தானே இந்திய அணியில் ஒற்றுமை இல்லாததை பார்த்ததாகவும் கூறியிருக்கிறார்.
இந்திய அணிக்கு பெரிய சரிவு
ராகுல் டிராவிட் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நகர்ந்த பிறகு, புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்தார். அவருடைய வருகைக்குப் பிறகு இந்திய அணி வரலாற்று தோல்விகளை பெற்றுக் கொண்டிருக்கிறது. அணியின் தன்னம்பிக்கை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்திய அணியில் தற்போது பும்ரா மற்றும் ஜெய்ஸ்வால் தவிர யாரும் நிரந்தரமான இடத்தில் காணப்படவில்லை.
மேலும் பல தலைமுறை சேர்ந்த வீரர்கள் ஒரே அணியில் இருப்பது, தொடர் தோல்விகள் ஆகியவை இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமை துண்டு துண்டாக உடைத்திருப்பதாகவும், வீரர்களை ஒன்றாக சேர்த்து எடுத்துச் செல்லும் தலைவராக தற்போது யாரும் இல்லை என்றும் இந்திய விளையாட்டு மூத்த பத்திரிகையாளர் பாரத் சுந்தரேசன் கூறியிருக்கிறார்.
இந்திய அணியில் ஒற்றுமை இல்லை
இதுகுறித்து பாரத் சுந்தரேசன் கூறும்பொழுது “இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூம் துண்டு துண்டாக உடைந்து இருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் உங்களிடம் பல தலைமுறை வீரர்கள் திடீரென ஒன்றாக வந்திருப்பதுதான். தற்போது அவர்களை ஒன்றாக ஆக்கக்கூடிய இழுக்கக்கூடிய ஒரு தலைவர் வேண்டும். அவர்களை ஒரே யூனிட்டாக மாற்ற வேண்டும்”
“பெர்த் மைதானத்தில் பிறகு நான் முதலில் கேட்ட விஷயம், இந்திய அணி இப்படி ஒரு வரலாற்று வெற்றியைப் பெற்று இருக்கிறது, ஆனால் அந்த வெற்றியை அவர்கள் ஒரு அணியாக சேர்ந்து கொண்டாடவில்லை. அவர்கள் தங்களுடைய சொந்த வழியில் தனியாக கொண்டாடினார்கள். இதனால்தான் நான் இதை உடைந்த ட்ரெஸ்ஸிங் ரூம் என்கிறேன்”
இதையும் படிங்க : 185 ரன்.. வம்பிழுத்த கான்ஸ்டாஸ் பதிலடி கொடுத்த பும்ரா.. போலன்ட் 49 வருட சாதனை.. சிட்னி டெஸ்ட்
“இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமில் வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த வீரர்கள் இருப்பதால், அவர்கள் வெவ்வேறு குழுக்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் விஷயங்களை தங்களது சொந்த வழியில் செய்கிறார்கள். இது குறித்து அணியின் ஊழியர் ஒருவரிடம் நான் பேசிய பொழுது, அவர் ‘நான் என்னுடைய கிரெடிட் கார்டை தருகிறேன், நான் ட்ரிங்க்ஸ் ஆர்டர் செய்வோம் என்று சொல்லி ஒன்றாக ஒட்டிக்கொள்ள அணியில் நிலைமை இல்லை’ என்று கூறினார். தற்பொழுது இதுதான் இந்திய ட்ரெஸ்ஸிங் ரூமின் நிலைமை” என்று கூறி இருக்கிறார்.






