ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்.. மாஸ் காட்டிய ரிஷப் பண்ட் ஜெய்ஸ்வால்.. விராட் ரோகித்துக்கு சரிவு.. கில்லும் முன்னேற்றம்

0
127
Rishabh

பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்திய அணி முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற பிறகு ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் ரேங்க் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் மூன்று இந்திய இளம் வீரர்கள் முன்னேற இரண்டு மூத்த இந்திய வீரர்கள் பின்னடைவை சந்தித்திருக்கிறார்கள்.

நடந்து முடிந்த பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் யூனிட்டில் ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் மூவரும் சிறப்பாக செயல்பட்டிருந்தார்கள். அதே சமயத்தில் மூத்த முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சரியாக செயல்படவில்லை.

- Advertisement -

திரும்பி வந்த ரிஷப் பண்ட்க்கு பரிசு

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏறக்குறைய இரண்டு வருடங்கள் கழித்து திரும்பி வந்த ரிஷப் பண்ட் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தார். இதன் காரணமாக அவர் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் ரேங்க் பட்டியலில் அதிரடியாக ஆறாவது இடத்தை பிடித்தார்.

மேலும் இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களில் அதிகபட்சமாக இந்திய டெஸ்ட் அணியின் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறார். அவர் பேட்டிங் செய்ய கடினமான சூழ்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி சரிவு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் உடன் இணைந்து விளையாடி சதம் அடித்திருந்த கில் ஐந்து இடங்கள் முன்னேறி 701 புள்ளிகள் எடுத்து 14வது இடத்தை பிடித்திருக்கிறார்.

அதே சமயத்தில் விராட் கோலி ஐந்து இடங்கள் சரிந்து 709 புள்ளிகள் உடன் 12வது இடத்திலும், ரோகித் சர்மா ஐந்து இடங்கள் சரிந்து 716 புள்ளிகள் உடன் 10வது இடத்திலும் நீடிக்கிறார்கள். அடுத்தடுத்து இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் விளையாட இருக்கின்ற காரணத்தினால் இந்திய வீரர்கள் இந்த பட்டியலில் மேற்கொண்டு ஆதிக்கம் செலுத்த அதிக வாய்ப்புகள் உண்டு.

இதையும் படிங்க : 86 பவுண்டரிஸ்.. 498 ரன்.. குஜராத்தின் இளம் வீரர் அதிரடி சாதனை.. பிரித்வி ஷா மெகா பட்டியலில் இணைந்தார்

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் ரேங்கிங் பட்டியல் :

ஜோ ரூட் – 899
கேன் வில்லியம்சன் – 852
டேரில் மிட்சல் – 760
ஸ்டீவ் ஸ்மித் – 757
யாஷஸ்வி ஜெய்ஷ்வால் – 751
ரிஷப் பண்ட் – 731
உஸ்மான் கவாஜா – 728
முகமது ரிஸ்வான் – 720
மார்னஸ் லபுஷேன் – 720
ரோகித் சர்மா – 716

- Advertisement -