தோனியின் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்த ரிஷப் பண்ட்

0
202
Rishabh Pant and MS Dhoni

இந்தியாவில் தற்போது தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி கேஎல் ராகுல் சதத்தின் உதவியால் 327 ரன்கள் குவித்தது. மயங்க் மற்றும் ரஹானே ராகுலுக்கு பக்கபலமாக விளையாடினர். அதன் பின்பு களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 197 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் பவுமா அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால் 200 ரன்களைக் கூட எட்ட முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி ஆட்டம் இழந்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்களை எடுத்துள்ளது.

நேற்றைய ஆட்டத்தின் மிக முக்கியமான விஷயம் என்ன என்றால் தென் ஆப்பிரிக்க வீரர் பவுமா கொடுத்த கேட்ச் வாய்ப்பை ரிஷப் பண்ட் பிடித்தது ஆகும். இது டெஸ்ட் வரலாற்றில் இவர் செய்த 100-வது ஆட்டமிழப்பு ஆகும். இதன்மூலம் குறைந்த போட்டிகளில் 100 பேரை ஆட்டமிழக்க வைத்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை தன்வசப்படுத்தினார் பண்ட். இந்த சாதனையை படைப்பதற்கு இவருக்கு வெறும் இருபத்தி ஆறு போட்டிகளே போதுமானதாக இருந்துள்ளது. இதற்கு முன்பு முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மட்டும் விக்கெட் கீப்பர் தோனி இதே சாதனையை முப்பத்தி ஆறு போட்டிகளில் நிகழ்த்தியிருந்தார். தோனிக்கு பிடித்து இந்திய அணியில் விக்கெட் கீப்பராக சஹாவும் அதே முப்பத்தி ஆறு போட்டிகளில் தான் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்தார். ஆனால் ரிஷப் பண்ட் தற்போது 10 போட்டிகள் குறைவாக அதே சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

இதில் 92 கேட்சுகள் மற்றும் 8 ஸ்டம்ப்பிங்குகள் அடங்கும். வீட்டில் மட்டும் இல்லாது பேட்டிங்கிலும் அசத்தி வரும் இவர் கடந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய தொடரில் இரண்டு முக்கிய போட்டிகளான சிட்னி மற்றும் பிரிஸ்பன் மைதானத்தில் நடந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடி இந்திய அணி தொடரை இழப்பதில் இருந்து காப்பாற்றினார். தற்போது இந்திய அணிக்கு விரைவாக ரன்கள் தேவை என்பதால் இரண்டாவது இன்னிங்சில் ரிஷப் பண்ட் ஆட்டம் எப்படி இருக்கப்போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.