629 ரன்ஸ்.. ரிஷப் பண்ட் படைத்த பிரம்மாண்ட சாதனை.. அசுர பேட்டிங் செய்யும் இந்தியா.. முழு நிலவரம்

0
12

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நான்காவது நாள் முதல் செஷனில் ரிஷப் பண்ட் சதம் அடித்து அபார சாதனை படைத்திருக்கிறார்.

நேற்று இந்த போட்டியில் மூன்றாம் நாள் முடிவில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் எடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து இன்று நான்காவது நாள் பேட்டிங் செய்ய வந்தது.

- Advertisement -

இந்த நிலையில் நைட் வாட்ச்மேன் அன்சூல் காம்போஜ் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் சதம் அடித்து 153 பந்துகளில் 128 ரன்கள் குவித்தார். துருவ் ஜுரல் 32 ரன் உடன் களத்தில் இருக்கிறார். மதிய உணவு இடைவேளையும் போது இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 629 ரன்கள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து அணியை விட 261 ரன்கள் கூடுதலாக எடுத்து முன்னிலை வகிக்கிறது.

இந்த போட்டியில் சதம் அடித்தது மூலமாக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என நான்கு சேனா நாடுகளிலும் டெஸ்ட் சதம் அடித்த முதல் ஆசிரியர் விக்கெட் கீப்பர் என்ற பிரம்மாண்ட சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -