முதல் டெஸ்ட் முடிந்ததும் கிளன் பிலிப்ஸ்க்கு சரக்கு வாங்கி தருவேன்.. போட்டியில் செய்த அந்த உதவியை மறக்க மாட்டேன் – கேஎல் ராகுல் பேட்டி

0
0

தற்போது நடந்து கொண்டிருக்கும் முதல் டெஸ்ட் போட்டி முடிந்ததும் பிலிப்ஸ் க்கு சரக்கு வாங்கி தருவதாக கேஎல் ராகுல் கலகலப்பாக கூறியிருக்கிறார்.

இதற்கான காரணம் என்னவென்றால், அவர் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது ஐந்து ரன்னில் எல்பிடபிள்யு அப்பீல் கேட்கப்பட்டது. ஆனால் போட்டி நடுவர் அவுட் கொடுக்கவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் நியூசிலாந்து அணியினர் மொத்தமும் ஒன்று கூடி 15 நொடிகளில் வேகவேகமாக ஆலோசனை நடத்தினார்கள். இறுதியில் பிலிப்ஸ் அது அவுட் ஆக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை என உறுதியாக அணியிடம் தெரிவித்தார்.

இதன் காரணமாக நியூசிலாந்து கேப்டன் ரிவியூ செய்ய வேண்டாம் என போய்விட்டார். இந்த நிலையில் அது அவுட் என தெரிய வந்தது. இதை பயன்படுத்திக் கொண்ட கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 136 ரன்கள் விளாசினார்.

- Advertisement -

இதுகுறித்து பேசி உள்ள கேஎல் ராகுல் இந்த போட்டி முடிவடைந்ததும் இதற்காக பிலிப்ஸ்க்கு நான் சரக்கு வாங்கி தர இருக்கிறேன் என்று ஜாலியாக சொல்லி இருக்கிறார்.

- Advertisement -