கம்பீர் சிங்கம் புலியை விட குதிரை ரொம்ப முக்கியம்.. நீங்க எடுத்த அந்த முடிவு மோசமானது – ரமேஷ் விமர்சனம்

0
0

​நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சிராஜ் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து இந்திய முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் அதிருப்தி தெரிவித்துப் பேசியிருக்கிறார்.

​வெலிங்டனில் நடைபெறும் இந்தப் போட்டியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கிய நிலையில், சிராஜ் இல்லாமலேயே முதல் இன்னிங்ஸில் அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது.

- Advertisement -

​சிராஜின் பந்துவீச்சு உழைப்பு குறித்துச் சடகோபன் ரமேஷ் பேசும்போது, “ஒரு டெஸ்ட் போட்டியில் சிங்கம் அல்லது புலியை விடக் குதிரை மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு ஸ்பெல்லிலும் ஒரு பவுலர் எவ்வளவு நேரம் பந்து வீச முடியும் என்பது மிகவும் முக்கியம், அதற்குச் சிறந்த உதாரணமாக இருக்கும் குதிரை சிராஜ். போட்டி முழுவதும் அவரது முயற்சி ஒரு சதவீதம் கூடக் குறையாது. பும்ரா, ஷமி மற்றும் இஷாந்த் சர்மா அணியில் இருந்தபோதே பிளேயிங் லெவனில் விளையாடி உறுதியாக இருந்த சிராஜுக்கு, இப்போது பும்ரா மட்டுமே இருக்கும்போது இடம் கிடைக்கவில்லை என்பது எனக்கு ஆச்சரியமாகவும் வருத்தமாகவும் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து கேப்டன் சுப்மன் கில் முன்பு கூறிய வார்த்தைகளைச் சுட்டிக்காட்டிச் சடகோபன் ரமேஷ் பேசும்போது, “கடந்த ஆண்டு இங்கிலாந்தில் சுப்மன் கில் கேப்டனாக இருந்த முதல் தொடரில், இந்தியா தொடரைச் சமன் செய்வதில் முக்கியப் பங்காற்றியவர் சிராஜ். அந்தத் தொடருக்குப் பிறகு சிராஜ் ஒரு கேப்டனின் கனவு வீரர் என்று கில் கூறினார். இப்போது அந்தக் கனவு உடைந்துவிட்டதா? இப்போது அவரை ஏன் நீக்கினீர்கள்?” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​இறுதியாக சிராஜ் மீண்டும் அணிக்குத் திரும்புவது குறித்துச் சடகோபன் ரமேஷ் பேசும்போது, “பந்தயத்தில் இருக்கும் சாதாரணக் குதிரை அல்ல அவர், பந்தயத்தில் மிகவும் ஃபிட்டாக இருக்கும் குதிரை என்பதால் சிராஜ் நிச்சயம் மீண்டும் சிறப்பாக வருவார். அவருக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்கும்போது, அவர் தீயாகக் களமிறங்குவார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -