இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தற்போது ஆறு விக்கெட்டுகளை இழந்து விளையாடி வந்தது. நேற்று களத்தில் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் காயம் அடைந்த நிலையில், அவர் நடப்பு தொடரிலிருந்து விலக அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வந்தது.
ரிஷப் பண்ட் மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் பண்டின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதாகவும், அது குணமடைய ஆறு வாரம் வரை அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
எனினும் மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி இந்திய அணி தொடரை வெல்ல வேண்டுமென்றால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இதனால் பண்ட் வலி நிவாரண மாத்திரைகளை சாப்பிட்டுக்கொண்டு பேட்டிங் செய்ய வருவதாக கூறியிருந்தார். முதலில் இதற்கு மருத்துவ குழுவினர் வேண்டாம் என்று சொல்லியும் பண்ட் கேட்கவில்லை.
இதை அடுத்துஅவர் மன உறுதியுடன் இதைக் கூறியதை அடுத்து பண்டிற்கு வலி நிவாரண சிகிச்சைகள் அளிக்கப்பட்டு அவர் இன்று மைதானத்திற்கு வந்திருந்தார்.இதனை அடுத்து சர்துல் தாக்கூர் 41 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில், ரிஷப் பந்த் மீண்டும் களத்திற்கு திரும்பினார். பண்ட் வந்தவுடன் ஒட்டுமொத்த ரசிகர்களும் எழுந்து நின்று அவருக்கு மரியாதை செலுத்தினர்.
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டும் அவர் களத்திற்கு திரும்பி இருக்கிறார் என்று ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.இதனால் இந்த போட்டியில் பண்ட், விக்கெட் கீப்பிங் பணியை செய்ய மாட்டார். ஆனால் பேட்டிங் செய்ய மட்டும் களத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கருண் நாயருக்கு கம்பீர் செய்தது நியாயமே கிடையாது.. இதுவரை இல்லாததை பண்ணிட்டாங்க – அஸ்வின் விமர்சனம்
தற்போது 105 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் மதிய உணவு நேர இடைவெளி எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு மேல் குவித்தால் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.