இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருடன் தனக்கு இருக்கும் உறவுமுறை குறித்தும், குறிப்பாக பும்ராவுடன் பகிர்ந்துகொள்ளும் சுவாரஸ்யமான தருணங்கள் குறித்தும் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் மனம் திறந்து பேசியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் பல வெற்றிகளை குவித்துள்ள இந்திய அணியின் முன்னணி வீரர்களுடன் லாங் கரியரில் இணைந்து விளையாடியுள்ள அஷ்வின், ஒவ்வொருவருடனும் உள்ள தனிப்பட்ட நட்பு குறித்து விரிவாக கூறியுள்ளார். அணியின் வெற்றிகளுக்காக அவர்கள் மைதானத்தில் காட்டிய தீவிர அர்ப்பணிப்பையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
குறிப்பாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் கேப்டன்ஷிப் ஸ்டைல் மற்றும் அவர்களின் தலைமை பண்பு அணியை எவ்வாறு முன்னெடுத்துச் சென்றது என்பதை அஷ்வின் பாராட்டி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கோல்டன் ஜெனரேஷனாக வலம் வந்த இந்த மூன்று வீரர்களுடனும் வெவ்வேறு விதமான அனுபவங்கள் தனக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஷ்வின் இதுகுறித்து பேசும்போது “விராட் கோலி ஒரு மோட்டிவேஷனல் கேப்டனாக இருந்து அணியை முன்மாதிரியாக வழிநடத்தினார். ரோகித் சர்மா மிகவும் டேட்டிக்கலி அஸ்ட்யூட் ஆன கேப்டனாக செயல்பட்டார். எனவே இந்த மூன்று பேருடனும் எனக்கு கிரேட் ரிலேஷன்ஷிப் இருக்கிறது, ஆனால் பும்ராவுடன் உள்ள உறவை நான் மிகவும் பொக்கிஷமாக கருதுகிறேன். மற்றவர்களை விட எப்போதுமே எனக்கு மிகவும் ஃபன்னாக இருக்கும் உறவுதான் பிடிக்கும். அந்த வகையில் பும்ராவுடன் எனது உறவு எப்போதும் மிகவும் என்ஜாய்பிளாக இருந்து வருகிறது” என்று கூறி இருக்கிறார்.
மேலும் பும்ராவுடன் உள்ள நட்பு குறித்து அஷ்வின் பேசும்போது “பும்ராவுடன் எனக்கு கிரேட் ரிலேஷன்ஷிப் இருப்பதற்கு காரணம், நாங்கள் இருவரும் எப்போதும் ஜாலியாக அரட்டை அடிப்பதுதான். நாங்கள் எப்போதுமே கிரிக்கெட் சம்மந்தமான விஷயங்களை பேசுவதே இல்லை. ஒன்று நான் அவரை கிண்டல் செய்வேன் அல்லது அவர் என்னை கலாய்ப்பார். அதனால் எங்கள் பந்தம் முழுக்க முழுக்க ஃபன் மற்றும் பேட்டர் ஓரியன்டெட் ஆனது. விராட்டை பொறுத்தவரை அவர் கேப்டன்சியில் இருந்து விலகி ஒரு சாதாரண பிளேயராக மாறிய பிறகு எங்கள் நட்பு இன்னும் நன்றாக மாறியது. அதேபோல் ரோகித்துடன் எனக்கு எப்போதும் ஒரு கிரேட் ரிலேஷன்ஷிப் இருந்து வருகிறது” என்று கூறி இருக்கிறார்.