பிட்ச் கண்டிஷன்ஸ் பற்றி சரியாக யோசிக்காமல் பெரிய ஷாட் ஆட முயன்றது மற்றும் அபிஷேக் சர்மா ஆரம்பத்தில் ரன்கள் அடிக்க சற்று நேரம் எடுத்துக்கொண்டது தான் சஞ்சு சாம்சன் சீக்கிரமாக விக்கெட்டை பறிகொடுக்க காரணம் என்று இந்திய முன்னாள் வீரர் புஜாரா கூறியிருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 6 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்து சஞ்சு அவுட் ஆன நிலையில், 4வது போட்டிக்கு முன்பாக புஜாரா இந்த கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
சஞ்சு சாம்சனின் டிஸ்மிசல் குறித்து புஜாரா பேசும்போது “அவர் பிட்ச் தன்மையை இன்னும் கொஞ்சம் புரிந்திருக்க வேண்டும். அபிஷேக் சர்மாவும் ரன் அடிக்க சற்று நேரம் எடுத்துக்கொண்டதால் சஞ்சுவுக்கு வேறு ஆப்சன் இல்லாமல் போனது. அதனால் அவர் சீக்கிரமாகவே அக்சலரேட் செய்ய முயன்றார், அதனால்தான் அந்த எர்ரர் நடந்தது. அவரது கைகளில் பேட் ட்விஸ்ட் ஆகிவிட்டது. பந்து நன்றாக வீசப்பட்டது என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவருக்கு இன்னும் கொஞ்சம் டைம் கிடைத்திருந்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பார்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் இஷான் கிஷன் ஆட்டம் குறித்து புஜாரா பேசும்போது “3வது இடத்தில் பேட்டிங் செய்யும் இஷான் கிஷன் இந்திய டீமுக்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக செய்கிறார். டாப் ஆர்டரில் அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கும்போது ஒவ்வொரு முறையும் பெரிய ஸ்கோர் எதிர்பார்ப்பது சரியாக இருக்காது. பவர் பிளேவை பயன்படுத்தி டீமுக்கு நல்ல ஸ்டார்ட் கொடுப்பதே அவர்களின் ரோல். இஷான் கிஷன் 30 முதல் 40 ரன்கள் வரை குவிக்ஃபையராக அடிப்பதே போதுமானது. அவரது பர்சனல் மைல்ஸ்டோனுக்கு பெரிய ரன்கள் தேவைப்படலாம், ஆனால் டீமுக்கான வேலையை அவர் சரியாக செய்கிறார்” என்று கூறி இருக்கிறார்.