எந்தவித ஈகோவுமின்றி இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஆட்டோகிராப் போட்டு பின்னர் புகைப்படமும் எடுத்துக் கொண்ட ரிஷப் பண்ட் – வீடியோ இணைப்பு

0
73

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரு அணிகளுக்கு இடையே 5வது டெஸ்ட் போட்டி வருகிற ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கின்றது. அதனையொட்டி கவுண்டி தொடரில் விளையாடி வரும் லெய்செஸ்ட்டர்ஷிர் அணியுடன் தற்போது இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடி கொண்டிருக்கிறது. லெய்செஸ்ட்டர்ஷிர் அணியில் இந்திய வீரர்கள் புஜாரா ரிஷப் பண்ட் ஜஸ்பிரித் பும்ரா பிரசித் கிருஸ்ணா என ஒரு சில இந்திய வீரர்கள் இடம்பெற்று விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் குவித்து டிக்லேர் செய்துள்ளது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரீகர் பரத் 70* ரன்கள் எடுத்த நிலையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் விளையாடிய லெய்செஸ்ட்டர்ஷிர் அணி முதல் இன்னிங்சில் 244 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது அந்த அணியில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 76 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

தனது இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட்கோலி 67 ரன்கள் குவித்தார். 367 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது லெய்செஸ்ட்டர்ஷிர் விளையாடிக் கொண்டிருக்கிறது. சுப்மன் கில் 32* ரன்கள் எடுத்த நிலையில் அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

ரசிகர்களின் மனதை வென்ற ரிஷப் பண்ட்

போட்டியை காண வந்த ரசிகர்கள் குறிப்பாக நிறைய சிறுவர்கள் இந்திய அணி வீரர்களிடம் இருந்து ஆட்டோகிராப் பெறவும், அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் விருப்பம் தெரிவித்தனர். அம்மைதான ஊழியர் ஒருவர் இந்திய வீரர்கள் அவ்வாறு புகைப்படம் மற்றும் ஆட்டோகிராப்புக்கு சம்மதிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

ஆனால் இந்திய வீரர் ரிஷப் பண்ட் திடீரென அவர்களிடம் சென்று ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். மேலும் அவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார். ரிஷப் பண்ட் இவ்வாறு செய்த செயல் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. அவர் அவ்வாறு புகைப்படம் எடுத்துக் கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

லெய்செஸ்ட்டர்ஷிர் அணியில் விளையாடி வரும் ரிஷப் பண்ட் முதல் இன்னிங்சில் அதிகபட்சமாக 74 ரன்கள் அந்த அணிக்கு அடித்தது குறிப்பிடத்தக்கது.