ரிஷப் பண்ட்டா, தினேஷ் கார்த்திக்கா? பிளேயிங் லெவனில் யார் கண்டிப்பாக இருக்க வேண்டும் – சுரேஷ் ரெய்னா கருத்து!

0
4722

தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் இருவரில் யாரை பிளேயிங் லெவனில் வைக்க வேண்டும் என்ற விவாதத்திற்கு பதில் அளித்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா.

டி20 உலக கோப்பைத் தொடர் குவாலிபயர் சுற்று துவங்கியது. மெயின் சுற்றுகள் வருகிற அக்டோபர் 22ஆம் தேதி துவங்குகிறது. அக்டோபர் 23ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிக்கு முன்னர் இந்திய அணி 2 பயிற்சி ஆட்டங்களில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணியுடனும், ஒரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியுடனும், மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடனும் விளையாட உள்ளது.

- Advertisement -

இந்த பயிற்சி ஆட்டத்தின் போது பல்வேறு பரிசோதனைகளை இந்திய கிரிக்கெட் அணி செய்து கொண்டிருக்கிறது. பந்துவீச்சு மற்றும் பேட்டிங் வரிசையில் மாற்றம் என அந்த பரிசோதனையில் நிகழ்கிறது.

இந்நிலையில் இந்திய அணியில் தற்போது தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் ஒரே மாதிரியான வீரர்களாக இருக்கின்றனர். கிட்டத்தட்ட டாப் 5 வீரர்களின் பேட்டிங் வரிசை உறுதியாகிவிட்டது. ஆறாவது இடத்தில் நிச்சயம் முழுமையான பேட்ஸ்மேன் விளையாடுவார். ஆனால் ஏழாவது இடம் ஆல்ரவுண்டரை ஆடவைப்பது மிகச் சரியாக இருக்கும் என பலரும் கருதி வருகின்றனர்.

ஐந்து பந்துவீச்சாளர்கள் மற்றும் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளர் இருந்தால் ஆஸ்திரேலியா மைதானத்தில் மிகவும் சரியாக இருக்கும். ஆகையால் தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட் இருவரில் ஒருவரை ஆறாவது இடத்தில் களம் இறக்கிவிட்டு, ஏழாவது இடத்தில் அக்சர் பட்டேல் போன்ற பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் இருந்தால் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் பலம் சேர்க்கும்.

- Advertisement -

இதன் அடிப்படையில் ரிஷப் பன்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரில் யாரை பிளேயிங் லெவனில் வைப்பது என பலரும் கருத்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், சுரேஷ் ரெய்னா இதற்கு பதில் அளித்திருக்கிறார். அவர் கூறுகையில்,

“இந்திய அணியின் முதல் ஐந்து இடங்கள் உறுதியாகிவிட்டது. ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களில் மட்டுமே தற்போது சந்தேகம் எழுந்திருக்கிறது. என்னை பொருத்தவரை ரிஷப் பணட்டை விளையாட வைப்பது மிகச் சிறந்தது. ஏனெனில் முதல் ஐந்து வீரர்களில் இடதுகை பேட்ஸ்மென்கள் யாரும் இல்லை. ரிஷப் மிகச் சிறப்பாக ஆஸி., மைதானங்களில் விளையாடியுள்ளார்.

மேலும் 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தது இடதுகை பேட்ஸ்மேன்கள். கௌதம் கம்பீர் மற்றும் யுவராஜ் இருவரின் பங்களிப்பை நாம் கண்டிருக்கிறோம். ஆகையால் இடது கை பேட்ஸ்மேன்களின் பேட்டிங்கை சற்றும் குறைத்து எடை போடக்கூடாது. நிச்சயம் அணியில் ஒருவர் இருக்க வேண்டும்.” என்றார்.