பயிற்சியில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஆடி பயிற்சி பெறும் ரிஷப் பண்ட் – வீடியோ இணைப்பு!

0
72
Rishab pant

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் சுற்றோடு தோல்வி அடைந்து வெளியேறியதில் இருந்து, இந்திய அணிக்குள் நிறைய மாற்றங்கள் நடைபெற்று வந்தது. புதிய வீரர்களின் வருகையும் மூத்த வீரர்களின் வருகையும் இருந்தது. மேலும் பந்துவீச்சில் பலவகையான கூட்டணிகள் பரிசோதிக்கப்பட்டது. அதைப் போலவே பேட்டிங் வரிசையிலும் பல மாறுதல்கள் செய்யப்பட்டன.

ரோகித் சர்மா ராகுல் டிராவிட் கூட்டணி கையில் இருக்கும் வீரர்களை வைத்து முடிந்த வரை எல்லா விதமான பரிசோதனை முயற்சிகளையும் செய்து பார்த்து ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள். ஆனாலும் இருக்கும் வீரர்களில் யாரை ஆடும் அணியில் சேர்ப்பது விலக்குவது என்பது குறித்து வெளியில் ஒரு தெளிவான பார்வை உண்டாகவில்லை.

- Advertisement -

இதை ஒரு பிரச்சினையாக பார்க்க முடியாது. ஏனென்றால் அணிக்கு தேர்வு செய்யப்பட்ட எல்லா வீரர்களுமே நல்ல நிலையில் இருக்கக்கூடிய வீரர்களாக இருப்பதால் இந்த நெருக்கடி உருவானது. தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டு இருந்தது.

நான் ஆடும் இந்திய அணியில் எத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெறுவார்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் எத்தனை பேர் இடம்பெறுவார்கள் அதில் யார் யார் இடம்பெறுவார்கள் என்ற ஒரு குழப்பம் நீடித்து வந்தது. அதே சமயத்தில் பேட்டிங்கில் நல்ல நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் ஆக ஆசிய கோப்பைக்கு தேர்வாகியுள்ள ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் இருக்கிறார்கள். இவர்கள் இருவரில் ஆடும் அணியில் யார் இடம் பெறுவார்கள் என்ற குழப்பமும் இருந்து வந்தது.

ஆனால் பாகிஸ்தான் போட்டிக்கு டாஸின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஆடும் அணியை தேர்வு செய்யும் பொழுது ஒரே ஒரு குழப்பம் தான் இருந்ததாகவும், அது விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இருவரில் யாரை எடுப்பது என்பதாகத்தான் இருந்ததாகவும் தெரிவித்தார். பினிஷிங் ரோலுக்கு ஒரு பேட்ஸ்மேன் தேவை என்கிற அளவில் ரிஷப் பண்டை விலக்கி தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்த்து இருந்தார்கள்.

- Advertisement -

தற்போது இன்று முதல் சுற்றின் இரண்டாவது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி ஆங்காங் அணியுடன் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிக்கு ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்குள் வருவாரா என்ற ஒரு சிறு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் முன்னாள் வீரர்கள் மத்தியிலுமே இருக்கிறது.

தற்போது வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள ரிஷப் பண்ட், முன்னாள் இந்திய கேப்டனும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆன மகேந்திர சிங் தோனியின் தயாரிப்பான ஹெலிகாப்டர் ஷாட்டை ஆடி பயிற்சி செய்யும் காணொளி தற்பொழுது வெளியாகி உள்ளது. நவீன டி20 கிரிக்கெட் வடிவத்திற்கு ஏற்றவாறு பேட்ஸ்மேன்கள் தங்களின் பயிற்சி முறைகளை மாற்றி வருகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!